Advertisment

பிஎஃப் - ஆதார் ஒப்பிட்டுப் பாருங்க... பெயர் மாற்றம் இருந்தால் உடனே சரி செய்யுங்க!

பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதியில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​ தெளிவாக வரையறுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPFO: உங்க குறை எதுவா இருந்தாலும் ஆன்லைனில் சரிசெய்யலாம்; ஈஸியான நடைமுறைகள்

Business News in Tamil : வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களில் திருத்தம் செய்யும் வகையில், ஊழியர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ​​) முன்பு உத்தரவிட்டது. தற்போது, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில், பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​ தெளிவாக வரையறுத்துள்ளது.

Advertisment

இருப்பினும், இப்போது EPFO ​-ன் வழிமுறைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்கள் சிறு மற்றும் பெரிய மாற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, திருத்தம் செய்வதற்கான செயல்முறை புதிய வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து மோசடி நிகழ்வுகளை, அந்த அமைப்பானது கவனித்ததன் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. புதிய வழிகாட்டுதலின் படி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றில் உள்ள பிழைகளை சரிசெய்ய உறுப்பினர்களிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள் அடிப்படையில் அவை மேற்கொள்ளப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

உறுப்பினர் சுயவிவரத்தில் முழுமையான மாற்றத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறை மூலம் சாதாரண வழிமுறைகளால் அந்நிறுவனம் அனுமதிப்பது கிடையாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தவிர, சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சரியான செயல்முறைகளை பின்பற்றியே, உறுப்பினரின் பெயரை மாற்றுவதற்கு அனுமதி வழங்குகிறது. ஏனென்றால், வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல மோசடி நிகழ்வுகளை உறுதிப்படுத்தியதன் வாயிலாக இந்த நடவடிக்கைகளை பின்பற்ற தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறிய திருத்தங்கள் :

சுய விவரத்தில் திருத்தம் என்பது, பெயர் அல்லது குடும்பப் பெயரை, அதன் சுருக்கத்திலிருந்து முழுப் பெயருக்கு விரிவாக்க அனுமதி வழங்கப்படுகிறது. தந்தையின் பெயர் அல்லது கணவரின் பெயர் ஆதாரில் நடுத்தர பெயராக இருந்தால், அந்த மாற்றத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் மாற்றிக் கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகு பெண் பயனாளரின் குடும்பப்பெயரில் மட்டும் மாற்றம் இருந்தால் அவற்றையும் அங்கீகரிக்கிறது.

முக்கிய திருத்தங்கள் :

சிறு திருத்தம் என்ற பிரிவில் வராத மாற்றங்களில் பயனாளரின் பெயர் அல்லது தந்தை பெயரில் முழுமையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு திருத்தமும் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் சம்பந்தப்பட்டவை அனைத்தும் முக்கியத் திருத்தங்கள் பிரிவில் வரும்.

சிறிய மற்றும் திருத்தங்களை அங்கீகரிக்க தகுதியான அதிகாரம்:

மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பெரிய திருத்தங்கள் சரியான ஆவண சான்றுகளைப் பெறாமல், ஆன்லைன் செயல்பாட்டில் மாற்றங்களை செய்ய இயலாது. இதில் பயனாளியிடமிருந்து தகுந்த விளக்கம் கோரப்பட்டு, உண்மையான தன்மையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு சரிபார்த்த பிறகே, மாற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Aadhar Card Provident Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment