நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இருந்து விலகிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு இபிஎஃப் குறித்த கவலை இருக்கும்.
அந்தக் கணக்கை எவ்வாறு புதுப்பிப்பது என்பது தொடர்பான கேள்விகள் உங்களுக்கு எழும். இபிஎஃப் விதிகளின்படி ஊழியர் ஒருவர் தனது வேலையை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றுகிறார் என்றால் அவர் முந்தையை கணக்கை தற்போதைய நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும்.
ஒரு ஊழியர் தனது இபிஎஃப் கணக்கை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
- வெளியேறும் தேதியைப் புதுப்பிக்க, உறுப்பினர் இந்த https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/. ஒருங்கிணைந்த போர்ட்டலைப் பார்வையிட வேண்டும்.
- யூஏஎன் மற்றும் கடவுச் சொல் மூலம் உள்நுழையவும்.
- மேனேஜ் ( Manage) என்ற பக்கத்துக்கு சென்று மார்க் எக்ஸிட் (Mark Exit) ஐ கிளிக் செய்யவும்.
- Employment dropdown என்பதில் இருந்து பி.எஃப் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
- ஓடிபி என்பதை கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண் இணைக்கப்பெற்ற மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபியை உள்ளீடவும்.
- Checkbox என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் வெளியேறிய தேதி புதுப்பிக்கப்படும்.
மேலும் வேலையை மாற்றினால், புதிய நிறுவனத்துக்கு பி.எஃப் கணக்கை மாற்றலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil