கல்வி, திருமணம், வீடு கட்ட… அவசரத்திற்கு உதவும் PF; எவ்வளவு தொகை எடுக்கலாம்?

EPFO loans for education marriage medical expenses: கணக்கு வைத்திருப்பவர்கள் சில நிபந்தனைகளின் கீழ், பிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு பணத்தை திரும்பப் பெறலாம். கல்வி, திருமணம், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் எந்தவொரு மருத்துவ சிகிச்சை போன்ற நிதி நோக்கங்களுக்காக, ஓரளவு திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அரசாங்கத்திற்கு சொந்தமான ஓய்வூதியத் திட்டம் ஆகும். இதனை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ), நிர்வகிக்கிறது. இதன் உறுப்பினர்கள் அல்லது கணக்கு வைத்திருப்பவர்கள் சில நிபந்தனைகளின் கீழ், பிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு பணத்தை திரும்பப் பெறலாம். 58 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 100 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம். ஒருவர் தனது 57 வயதில் கூட தனது கணக்கிலிருந்து 90 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். பி.எஃப் தொகை ஓய்வுபெறும் நேரத்தில் அல்லது முதிர்வு காலத்திற்குப் பிறகு மொத்த தொகையாக ஈடுசெய்யப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் தனது ஆயுட்காலம் அடையும் முன் மாத வருமானத்தைப் பெறுவதற்கு சரியான முறையில் திரும்பப் பெறுவதை நிர்வகிக்க வேண்டும்.

ஓய்வு பெறுவதற்கு முன்னர் பி.எஃப் தொகையை திரும்பப் பெறுமாறு ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் சந்தாதாரர்கள் அவ்வாறு செய்யலாம். கல்வி, திருமணம், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் எந்தவொரு மருத்துவ சிகிச்சை போன்ற நிதி நோக்கங்களுக்காக, ஓரளவு திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், பெறப்பட்ட வட்டி மற்றும் திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சூழ்நிலைகளில் மட்டுமே பி.எஃப்-ல் இருந்து ஓரளவு திரும்பப் பெறுதல் அல்லது முன்பணம் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், ஈபிஎஃப் கூட்டுவட்டியில் கணக்கிடப்படுவதால் பணத்தை திரும்பப் பெறாமல் வைத்திருந்தால் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் பி.எஃப் கணக்கிலிருந்து உங்களுக்கு, உங்கள் மனைவி, குடும்பம் அல்லது குழந்தைகளின் மருத்துவ பராமரிப்புக்காக நீங்கள் பணத்தை எடுக்கலாம். கணக்கு வைத்திருப்பவரின் 6 மாத அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ அல்லது ஊழியர்களின் வட்டி, இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகையை திரும்பப் பெறலாம். எனவே, மருத்துவ பராமரிப்புக்காக, உங்கள் சம்பளத்தின் 6 மடங்கு வரை திரும்பப் பெறலாம். இதற்கு குறைந்தபட்ச பணி கால அளவு தேவையில்லை.

கணக்கு வைத்திருப்பவரின் திருமணம் அல்லது அவரது குழந்தை அல்லது சகோதரர் அல்லது சகோதரி திருமணத்திற்காக பி.எஃப் திரும்பப் பெறலாம். ஊழியரின் பங்கில் ஒட்டுமொத்தமாக 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம். இதற்கு, ஊழியருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி கால அளவு இருக்க வேண்டும்.

ஊழியரின் கல்வி அல்லது அவரது குழந்தைகளின் உயர்கல்வி போன்ற கல்வி காரணங்களுக்காக பி.எஃப்லிருந்து 50 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். இதற்கு, அந்த ஊழியருக்கு 7 ஆண்டுகள் பணி கால அளவு இருக்க வேண்டும். எனவே, திருமணம் அல்லது கல்விக்கு பி.எஃப்லிருந்து 50 சதவீதம் வரை 3 முறை திரும்பப் பெறலாம்.

வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு, சந்தாதாரர் 10 வருட பணி கால அளவை முடித்தவுடன், 90 சதவிகிதம் வரை நிறுவனம் மற்றும் பணியாளரின் பங்களிப்பிலிருந்து திரும்பப் பெறலாம். இதற்கு சொத்து ஊழியர் அல்லது ஊழியர் மற்றும் அவரது மனைவி பெயரில் கூட்டாக பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, சந்தாதாரரின் ஊதியத்தை 36 மடங்கு வரை திரும்பப் பெற முடியும்.

இதேபோல், வீட்டை புனரமைப்பதற்கும் பி.எஃப் திரும்பப் பெறலாம், இதற்காக சந்தாதாரர் 5 வருட வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆகையால், ஒரு சந்தாதாரர் வீட்டை மேம்படுத்துவதற்கும் புதுப்பிப்பதற்கும் அவரது சம்பளத்தை விட 12 மடங்கு வரை திரும்பப் பெறலாம், மேலும் ஒரு வீட்டுமனை அல்லது நிலத் தோட்டத்தை வாங்குவதற்காக ஊழியர் தனது சம்பளத்தின் 24 மடங்கு வரை திரும்பப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo loans for education marriage medical expenses

Next Story
டூவீலர் உற்பத்தி நிறுத்தம்: 4 நாள் ஆலைகளை மூடும் ஹீரோ நிறுவனம்Hero shuts plants amid surge, first such action by big firm
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express