Employees Provident Fund Organisation: ஆன்லைனில் பி.எப். பணத்தை மாற்றிக்கொள்ளலாமா? ஆம், முந்தைய நிறுவனத்தின் பி.எஃப் பணத்தை புதிய நிறுவன கணக்குடன் சேர்ப்பது சுலபம். அதற்கான வழிமுறையை இங்கு காணலாம்.
Advertisment
அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்கால தேவை கருதி, பி.எப். தொகை, அந்நிறுவனங்களினால் அவர்களின் வங்கி கணக்குகளில் சேமிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஒரு வேலையில் இருந்து புதிய வேலைக்கு சென்றால் பழைய நிறுவனத்தில் கட்டிய பி.எப். தொகையை புதிய நிறுவனத்தில், உங்களது யுஏஎன் எண்ணைக்கொண்டு புதிய பிஎப் கணக்கு துவங்கி, புதிய நிறுவன கணக்குடன் எளிதாக இணைத்துவிட முடியும்.
யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உங்களது பிஎப் கணக்கை, ஆன்லைனில் லாகின் செய்து, ஆன்லைன் சர்வீசஸ் என்ற பகுதிக்கு சென்று அதில் ஒன் மெம்பர் – ஒன் இபிஎப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர் ரிகொஸ்ட் என்ற பிரிவிற்கு செல்லுங்கள். அதில் மீண்டும் உங்களது யுஏஎன் எண் அல்லது பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் அதன் விபரங்கள் கிடைத்து விடும்.
பின் எந்த அக்கவுண்ட்டில் இருந்து எந்த அக்கவுண்டிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடவும். பழைய நிறுவன கணக்கை தேர்வு செய்தவுடன், ஒன்டைம் பாஸ்வேர்ட் ஜெனரேட் ஆகும். அந்த ஒன்டைம் பாஸ்வேர்டை, அதற்குரிய கட்டத்தில் பதிவு செய்தவுடன், உங்களது கோரிக்கை, அந்த நிறுவனத்துக்கு சென்றுவிடும்.
பின் நமது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை, Track Claim Status பிரிவிற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். ஊழியர்கள், இந்த ஆன்லைன் வசதியை, பிஎப் பணத்தை எடுப்பதற்கும், பென்சன் பணத்தை எடுப்பதற்கும் மற்றும் பிஎப் அட்வான்ஸ் தொகையை பெறுவதற்கும் பயன்படுத்தலாம் .