EPFO News Provident Fund : உங்களின் மாத சம்பளத்தில் இருந்து அதிகப்படியான பணம் பிடித்தமாக செல்கிற போது, கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும். ஆனால் உங்களின் பணி ஓய்வுக்கு பிறகு இந்த பிடித்தம் எவ்வளவு தூரம் உதவிகரமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அதன் பயன்கள் உங்களின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் மிகவும் அதிகமானது. நீங்கள் உங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது பி.எஃப். உங்களுக்கு அதிகப்படியான சேமிப்பை கொடுத்து உதவும்.
தற்போதைய அறிவிப்பின் படி, எ.பி.எஃப். கணக்கில் சேமிக்கப்படும் பணத்திற்கு மத்திய அரசு 8.5% வரை வட்டி தருகிறது. இந்த வட்டியானது மற்ற வங்கிகள் தரும் வைப்பு நிதி சேமிப்பு கணக்கு மற்றும் இதர மத்திய அரசு திட்டங்களுக்கு கொடுக்கப்படும் வட்டியைக் காட்டிலும் மிக அதிகம்.
ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ. 25 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு கிடைக்கும் பி.எஃப். வட்டியானது 8.5% என்றால், 35 ஆண்டுகளில் அவருடைய பி.எஃப். சேமிப்பு கணக்கில் தோராயமாக ரூ. 1.65 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கணக்கில் சேமிக்கப்படும் பணத்திற்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது மட்டும் தான். எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் பி.எஃப். பணத்தை எடுக்காதீர்கள். மேலும் நீங்கள் பி.எஃப். கணக்கு துவங்கிய 5 வருடங்களில் அந்த பணத்த எடுத்தால் அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் வேறொரு நிறுவனத்திற்கு மாற்று ஆகி செல்கிறீர்கள் என்றால் உங்களின் பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்தை புதிய கணக்கிற்கு மாற்றம் செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil