தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் செயல்படுகிறது. ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று உட்பட பல்வேறு காரணங்களுக்காக வேலையை விட்டு விலகியவர்களுக்கு பிஎஃப், பேன்ஷன் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கான பணியில் இபிஎஃப்ஓ உள்ளது. இந்த முடிவின் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலையை விட்ட மக்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இது EPFOவில் கணக்கு தொடங்கிவிட்டு, சில காரணங்களால் வேலையை விட்டவர்களை குறிக்கிறது.
இவர்கள் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது 12% மாத வருமானம் செலுத்தி PF இன் பலனைப் பெறலாம்.இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியதாக EPFO அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
EPFO கூற்றுப்படி, 2018 மற்றும் 2020 க்கு இடையில் மட்டும், சுமார் 48 லட்சம் பேர் EPFO கணக்கிலிருந்து விலகியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் எண்ணிக்கை அதிகிரித்துவிட்டது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், மில்லியன் கணக்கான மக்கள் பலனடைவார்கள்.
வட்டியும் அதிகம்
இந்த திட்டத்தின் தான், வேறு எந்த சேமிப்பு திட்டத்திலையும் கிடைக்காத வட்டி அதிகளவில் கிடைக்கிறது.2020-2021 நிதியாண்டிற்கான EPFO இன் வட்டி விகிதம் 8.5 சதவீதம் ஆகும். இந்த வட்டி விகிதம் எந்த ஒரு சேமிப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியை விட அதிகமாகும்.
வங்கிகள் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் 3.5 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. அதேபோல், FD-களுக்கு 2.5 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil