உச்ச நீதிமன்றத்தின் 4 மாத காலக்கெடு முடிவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக, அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பளித்து, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊதிய உச்சவரம்பைவிட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்புகளை தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து பணியில் இருந்த ஊழியர்களுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 20-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், EPFO அதன் கள அதிகாரிகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தல் தொகுப்பில், அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்பத்தை (ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் மூலம்) பயன்படுத்தலாம்: ஒன்று, நடைமுறையில் உள்ள ஊதிய உச்சவரம்பு 5,000 அல்லது 6,500க்கு மேல் சம்பளத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்;
இரண்டு: இரண்டு, இ.பி.எஸ் 95-ன் உறுப்பினர்களாக இருந்தபோது, திருத்தத்திற்கு முந்தைய திட்டத்தின் (நீக்கப்பட்டதிலிருந்து) பாரா 11(3) விதியின் கீழ் கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தவில்லை;
மூன்று: 01.09.2014 க்கு முன்னர் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மற்றும் 01.09.2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினராக இருந்தவரகளுக்கு முன்னுரிமை.
பணியில் உள்ள ஊழியர்களுக்கான இ.பி.எஃப் வழிமுறைகள்
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தலாம். 01.09.2014 அன்று அல்லது அதற்கு முன் இ.பி.எஸ்-ன் சந்தாதாரராகத் தொடர்ந்த ஊழியர்களுக்கு ஆன்லைன் வசதி வழங்கப்படும். அதன் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். “மண்டல பி.எஃப் ஆணையர், விரிவான பொது தகவல்களுக்கு அறிவிப்பு பலகை மற்றும் பேனர்களில் போதுமான அறிவிப்பை வைக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அதிக ஊதியத்தில் பங்களித்திருந்தும், விருப்பத்தை முறையாகப் பயன்படுத்தாத ஊழியர்கள் இப்போது EPFO-ன் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு சரிசெய்தல் தேவைப்படும் பங்கின் விஷயத்தில், நிதிக்கு ஏதேனும் மறு டெபாசிட் செய்தால், கூட்டு விருப்ப படிவத்தில் பணியாளரின் வெளிப்படையான ஒப்புதல் வழங்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து EPFO-ன் ஓய்வூதிய நிதிக்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டால், அறங்காவலரின் உறுதிமொழி சமர்ப்பிக்கப்படும். “விலக்கு அளிக்கப்படாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, தேவையான முதலாளியின் பங்களிப்பைத் திரும்பப் பெறுவது, இ.பி.எஃப் திட்டத்தின் 60-வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட விகிதத்தில் வட்டியுடன் டெபாசிட் செய்யப்படும்.”
“1952 முதல் இன்றைய தேதி வரைக்கும் சரியான நிதி திரும்ப செலுத்தப்படும்” என்று கூறியுள்ளது. மேலும், டெபாசிட் செய்யும் முறை மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிடும் முறை ஆகியவை அடுத்தடுத்த சுற்றறிக்கையின் மூலம் பின்பற்றப்படும் என்று கூறியுள்ளது.
EPFO-வால் வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கைகள்
கடந்த மாதம், EPFO உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற்ற மற்றும் செப்டம்பர் 2014-க்கு முன்னர் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வழக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. ஆனால், ஓய்வூதிய நிதி அமைப்புடன் அதிக ஊதியத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத்தை தேர்வு செய்யவில்லை.
அந்தச் சுற்றறிக்கையில், “அதிகப் பணம் செலுத்துவதை நிறுத்துவதற்காக, செப்டம்பர் 1, 2014-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களைப் பொறுத்தவரை, பாரா 11 (3) அல்லது முன் திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் எந்த விருப்பத்தையும் பயன்படுத்தாமல், ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2023 முதல் அவர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக ஊதியத்தில், அவர்களின் விவகாரம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஓய்வூதியம் உடனடியாக ரூ.5000 அல்லது ரூ. 6500 வரையிலான ஊதியத்தில் ஓய்வூதியமாக மீட்டெடுக்கப்படலாம்” என்று கூறியுள்ளது.
அடிப்படை ஊதியத்தைவிட உண்மையான அதிக ஊதியத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற்ற இ.பி.எஃப் சந்தாதாரர்களுக்கு குறைந்த ஓய்வூதிய பலன்கள் குறித்த சுற்றறிக்கை கவலைகளை எழுப்பியுள்ளது. ஓய்வூதியதாரருக்கு முன்கூட்டிய அறிவிப்பை வெளியிடவும், ஓய்வூதிய உரிமையை மறுபரிசீலனை செய்வதற்கு முன் சந்தாதாரருக்கு விருப்பத்தேர்வை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கவும் இ.பி.எஃப் அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன், டிசம்பரில், உண்மையான ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் வழங்கிய ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்களை விவரிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அவர்களின் கோரிக்கை வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களால் நிராகரிக்கப்பட்டது. 5,000 அல்லது 6,500 ரூபாய்க்கு மேல் ஊதியத்தில் ஓய்வூதியத்திற்காக பங்களித்த உறுப்பினர்கள் மற்றும் அத்தகைய பங்களிப்பிற்கு முதலாளிகளுடன் கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் அவர்களின் விருப்பம் பி.எஃப் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதால், அதிக ஓய்வூதியம் செலுத்துவதற்கான விருப்பத்தை சரிபார்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இ.பி.எஃப் ஓய்வூதியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் மாத தீர்ப்பு
நவம்பர் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஊழியர்களின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டம், 2014-ஐ உறுதி செய்தது, இ.பி.எஸ்-ஐப் பெற்ற இ.பி.எஃப் உறுப்பினர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களில் அதிக வருடாந்திர பங்களிப்பை தேர்வுசெய்ய மற்றொரு வாய்ப்பை அனுமதித்தது. செப்டம்பர் 1, 2014-ல் இ.பி.எஸ் உறுப்பினர்களாக இருந்த ஊழியர்களுக்கு, அவர்களின் உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதம் வரை பங்களிக்க மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது - ஒவ்வொரு மாதமும் ரூ. 15,000 என வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தில் 8.33 சதவீதம் ஓய்வூதியத்திற்காக செலுத்தலாம்.
சட்டப்பிரிவு 142-ன் கீழ் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, புதிய திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான நேரத்தை நான்கு மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்தது. “உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட பிந்தைய திருத்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தது. எனவே, இந்த விருப்பத்தைப் பயன்படுத்தாத, ஆனால், அவ்வாறு செய்ய உரிமையுள்ள, ஆனால் கட்-ஆஃப் தேதியின் விளக்கம் காரணமாக முடியாமல் போன அனைத்து ஊழியர்களுக்கும் சில மாற்றங்களை வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் அப்போது கூறியது.
இந்த சட்டத் திருத்தத்திற்கு முந்தைய திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நிதியில் இருந்து வெளியேறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சம்பளத்தின் சராசரியாக ஓய்வூதிய ஊதியம் கணக்கிடப்பட்டது. இந்தத் திருத்தங்கள் ஓய்வூதிய நிதியத்தின் உறுப்பினரிலிருந்து வெளியேறுவதற்கு சராசரியாக 60 மாதங்களுக்கு முன்பு இதை உயர்த்தியது.
இந்த மாற்றங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதில், “ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளத்தின் கணக்கீட்டின் அடிப்படையை மாற்றுவதில் நாங்கள் எந்த குறையும் காணவில்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 முதலில் எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் வழங்கவில்லை. 1995-ம் ஆண்டில், ஒரு திருத்தத்தின் மூலம், ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் ஓய்வூதிய நிதியானது வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டிய முதலாளிகளின் பங்களிப்பில் 8.33 சதவீதத்தை வைப்புத் தொகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.5,000 ஆக இருந்தது. பின்னர், ரூ.6,500-ஆக உயர்த்தப்பட்டது.
EPFO-வால் நிர்வகிக்கப்படும் இ.பி.எஸ், 58 வயதிற்குப் பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இ.பி.எஃப்-க்கு பங்களிக்கின்றனர். பணியாளரின் முழுப் பகுதியும் இ.பி.எஃப்-க்கு செல்கிறது. அதே நேரத்தில், முதலாளியின் 12 சதவீத பங்களிப்பு இ.பி.எஃப்-க்கு 3.67 சதவீத பங்களிப்பாகவும், இ.பி.எஸ்-க்கு 8.33 சதவீத பங்களிப்பாகவும் பிரிக்கப்படுகிறது. இது தவிர, இந்திய அரசு ஒரு ஊழியரின் ஓய்வூதியத்திற்காக 1.16 சதவீதம் கூடுதலாக வழங்குகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் பணியாளர்கள் பங்களிப்பதில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.