அவசரத்திற்கு கடன், பென்ஷன்… பிஎஃப் ஸ்கீம் பலன்களை முழுமையா தெரிஞ்சுக்கோங்க!

5 benefits of PF account Tamil News: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (ஈ.பி.எஃப்.ஓ) பங்களிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் பல்வேறு சலுகைகளை பெறுகிறார்கள். இதில் இலவச காப்பீடு மற்றும் ஓய்வூதிய சலுகைகளும் அடங்கும். இவை போன்ற மற்ற சலுகைகள் குறித்து இங்கு காண்போம்.

second Covid-19 advance withdrawal

EPFO Tamil News: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி சலுகைகளில் இலவச காப்பீடு மற்றும் ஓய்வூதிய சலுகைகளும் அடங்கும்.

மாதாந்திர பி.எஃப் பங்களிப்புக்காக ரூ .15,000 வரம்பை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் கட்டாயமாக இருக்கும் வருங்கால வைப்பு நிதி, பொதுவாக ஓய்வூதியம் சார்ந்த முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது.வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ், ஒரு ஊழியர் ஒரு நிதியாண்டில் ரூ .1.5 லட்சம் வரை பி.எஃப் பங்களிப்பில் வருமான வரி விலக்கு பெறுகிறார். 

மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (ஈ.பி.எஃப்.ஓ) பங்களிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் பல்வேறு சலுகைகளையும் பெறுகிறார்கள். இந்த சலுகைகளில் இலவச காப்பீடு மற்றும் ஓய்வூதிய சலுகைகளும் அடங்கும். அதோடு இது போன்ற மற்ற சலுகைகள் குறித்து இங்கு காண்போம். 

1] இலவச காப்பீடு

ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர் இயல்பாகவே பணியாளர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) இன் கீழ் சேவை காலத்தில் இறந்தால் ரூ .7 லட்சம் வரை இலவச காப்பீட்டுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

முன்னதாக, பி.எஃப் கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு பாதுகாப்பு ரூ .6 லட்சமாக வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அது ரூ .7 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, பி.டி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் ஈ.டி.எல்.ஐ.யின் கீழ் வழங்கப்பட்ட இந்த உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு எந்த காப்பீட்டு பிரீமியத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

2] ஓய்வூதிய வழங்கல்

ஒரு பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். இருப்பினும், ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஒருவரின் பி.எஃப் கணக்கில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வழக்கமான மாதாந்திர பி.எஃப் பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஓய்வூதிய நன்மை முதலாளியின் பங்களிப்பிலிருந்து வருகிறது. ஏனெனில் அதன் பங்களிப்பில் 8.33% (12% இல்) பிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் இபிஎஸ் கணக்கிற்கு செல்கிறது.

3] பி.எஃப்-க்கு எதிரான கடன்

நிதி அவசரகாலத்தில், ஒரு பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர், அவரின் பி.எஃப் இருப்புக்கு எதிராக கடன் வாங்கலாம் மற்றும் விதிக்கப்படும் பி.எஃப் கடன் வட்டி விகிதம் 1% மட்டுமே. கடன் குறுகிய கால இயல்புடையதாக இருக்கும் மற்றும் கடன் வழங்கப்பட்ட 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

4] அவசரகாலத்தின் போது ஓரளவு திரும்பப் பெறுதல்

சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மருத்துவ அல்லது நிதி அவசரநிலை ஏற்பட்டால் ஓரளவு திரும்பப் பெற EPFO ​​அனுமதிக்கிறது.

5] வீட்டுக் கடன் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்

ஒரு நபர் தங்கள் பிஎஃப் கணக்கை வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்தலாம். EPFO விதிகளின்படி, அவர்கள் ஒரு புதிய வீட்டை வாங்குவதற்காக அல்லது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக 90% PF நிலுவைத் தொகையை திரும்பப் பெறலாம். ஒருவரின் பி.எஃப் நிலுவைகளைப் பயன்படுத்தி அவர்கள் நிலத்தையும் வாங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo tamil news 5 benefits of pf account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com