EPFO Tamil News: ‘வருங்கால வைப்பு நிதி முன்பணம் செயலாக்கத்தில் உள்ளது’, இப்படிதான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கோவிட் -19 வருங்கால வைப்பு நிதி கிளைம்களை தீர்வு செய்து வருகிறது. கடந்த 15 வேலை நாட்களில் ஈபிஎப்ஓ 6.06 லட்சம் COVID-19 non-refundable advance claims உட்பட 10.02 லட்சம் withdrawal claims மற்றும் ரூபாய் 3,600.85 கோடியை வழங்கியுள்ளது என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவிட் -19 க்கான வருங்கால வைப்பு நிதி முன்பணம் (PF Advance for COVID-19) பெற பலர் விண்ணப்பித்துள்ளனர். அதே போல் பலர் அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்கில் பெற இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களுடைய பிஎப் (PF) withdrawal விண்ணப்பத்தை குறித்து அப்டேட் செய்யும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎப்ஓ) டிவிட்டர் மூலம் அளிக்கும் பதில்களில் முதலில் வரும் கிளைம்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்ப்பதாக தெரிவித்துள்ளது.
EPFO Covid 19 Withdrawal: கொரோனா வைரஸ் பி.எஃப் நிதி
கோவிட்- 19 தொற்று பரவலுக்கு மத்தியில் சம்பளம் வாங்கும் ஏதாவது தனிநபர்களுக்கு அவர்களுடைய ‘பிஎப்’பிலிருந்து நிதி தேவைப்பட்டால் அவர்கள் ’கோவிட் -19 க்கான வருங்கால வைப்பு நிதி முன்பணம் மூலம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பிஎப் முன்பணம் பொதுவாக கல்வி, வீடு கட்டுதல் அல்லது மருத்துவ தேவைகளுக்காக வழங்கப்படும். ஆனால் பணத்தேவைக்கு கோவிட் -19ஐ ஒரு காரணமாகக் கூறி தொழிலாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சமீபத்தில் அரசு அனுமதித்துள்ளது.
முன்பண கிளைம்களை டிவிட்டர் மூலமாக கேட்பவர்களுக்கு அளிக்கப்படும் பதில் பின்வருமாறு உள்ளது: ‘அன்பார்ந்த உறுப்பினர்களே நாங்கள் கிளைம்களை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தீர்த்து வருகிறோம். தங்களது முறை வரும் வரை தயவு கூர்ந்து காத்திருக்கவும். தேவையில்லாமல் குறைகளை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த இக்கட்டான நாட்களில் நாங்கள் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் மட்டுமே இயங்கி வருகிறோம். எனவே எங்களுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்’.
பிஎப் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் வேறு சில பதில்களில், ஈபிஎப்ஓ பணியாளர்களை முதலில் அவர்களது ஆதார்- வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள். KYC- ஐ, உறுப்பினர்களுக்கான portal மூலமாக புதுப்பிக்க சொல்கின்றனர். இதில் ஏதாவது விவரங்கள் பொருந்தவில்லை என்றால், குறிப்பிட்ட உறுப்பினர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அடையாளத்திற்கான ஆவணம், ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடனும் அணுகச் சொல்கின்றனர்.
செக் புத்தகம் (cheque book) இல்லாததால் கோவிட் -19 க்கான வருங்கால வைப்பு நிதி முன்பணம் பெற விண்ணப்பிக்க முடியாதவர்கள், அவர்களுடைய பாஸ் புத்தகத்தின் (passbook) முன்பக்கத்தை (உறுப்பினரின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் IFSC குறியீடு அகியவை அடங்கிய) ஸ்கேன் செய்து இணைக்க ஈபிஎப்ஓ கூறியுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் அவர்களுடைய கிளைமின் நிலையை ஆன்லைன் சேவைகளின் கீழ் உள்ள உறுப்பினர் Portal-ல் லாக் இன் செய்து ‘Track Claim Status’ ஐ சொடுக்கி பார்த்துக் கொள்ளலாம்.
கிளைம் நிலையில் (status) ‘settled’ என்று தெரிந்தும் பணம் உறுப்பினரின் வங்கி கணக்கில் வரவு வைக்க்பபடவில்லை என்றால், உறுப்பினர்கள் அவர்களுடைய UAN உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி விவரங்களை சரிப்பார்க்கவும். அது தவறாக இருந்தால் பணம் வரவு வைக்கப்படாது. மாறாக அது சம்பந்தப்பட்ட பிஎப் கணக்குக்கு திருப்பி சென்றுவிடும்.
கடந்த 15 வேலை நாட்களில் ஈபிஎப்ஓ 6.06 லட்சம் COVID-19 non-refundable advance claims உட்பட 10.02 லட்சம் withdrawal claims மற்றும் ரூபாய் 3,600.85 கோடியை வழங்கியுள்ளது என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தொழிலாளர் அமைச்சக அறிக்கையின்படி. 90 சதவிகித COVID-19 non-refundable advance claims 3 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.