EPFO Tamil News: சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியாளர் மற்றும் நிறுவனம் ஆகியோர் தனித்தனியே செலுத்த வேண்டிய தலா 12 சதவிகித பங்களிப்பை (மொத்தமாக 24 சதவிகிதம்) அடுத்த மூன்று மாதங்களுக்கும் அதாவது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அரசே செலுத்தும். இதற்கான முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணம் அனைத்து பணியாளர்களுக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது. மொத்தமாக 100 பணியாளர்கள் வரை வேலை செய்கிற நிறுவனங்களில் 90 சதவிகிதம் பேர் ரூபாய் 15,000/- க்கும் குறைவான மாத சம்பளம் பெறும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மட்டும்தான் இந்த வருங்கால வைப்பு நிதி சலுகை பொருந்தும்.
அரசு ஊழியரா நீங்கள்? பங்கு சந்தையில் முதலீடு செய்ய இதுதான் ரூல்ஸ்!
ஏற்கனவே Pradhan Mantri Rozgar Protsahan Yojana (PMRPY) திட்டத்தின் கீழ் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலகட்டத்திற்கு 12 சதவிகித நிறுவனங்களின் பங்களிப்பை பெற்று வரும் பயனாளர்கள் இந்த சலுகையிலிருந்து விலக்கபடுவர்.
Employees' Provident Fund Organisation- தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு
வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பான 12 சதவிகிதம் மற்றும் நிறுவனங்களால் செலுத்தப்படவேண்டிய பங்களிப்பான 12 சதவிகிதம் ஆகியவை மார்ச் முதல் மூன்று மாதங்களுக்கு அரசால் செலுத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய அறிவிப்புக்கு பிறகு இந்த சலுகை ஏற்கனவே உள்ள மூன்று மாதங்களுடன் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாத காலத்துக்கு பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு தொகையை செலுத்த தேவையில்லை அதற்கு பதிலாக அரசே அந்த தொகையை பணியாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தும்.
பெரியவர்களுக்கு அக்கவுண்ட ஓபன் பண்ண வேண்டுமா? இந்த வங்கி போங்க வட்டி அதிகம்!
பணியாளரின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் தலா 12 சதவிகிதம் பணியாளர் மற்றும் நிறுவனங்களால் சமமாக பங்களிக்கப்படுகிறது. பணியாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் திரளும் அத்தகைய மாதாந்திர இயங்கும் நிலுவைத் தொகைக்கும் (monthly running balance) வட்டி விகிதமும் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பங்களிப்பாக ஓய்வூதிய பங்களிப்பு 8.33 சதவிகிதம், ஒவ்வொரு மாதமும் பணியாளரின் ஓய்வூதிய திட்டத்திற்கு (employee’s pension scheme EPS) செல்கிறது.
கோவிட் -19 தொற்று காரணமாக அரசு Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY)/ Aatmanirbhar Bharat ஆகிய திட்டங்களின் கீழ் அறிவித்த தொகுப்பின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.
3.67 லட்சம் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 72.22 லட்சம் பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.