வேலையை இடம் மாற்றுகிறீர்களா? EPFO-ல் இந்த சின்ன வேலையை மறந்துடாதீங்க!

EPF Transfer: பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்துக்கு உங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும்.

EPFO, Employees' Provident Fund Organisation, EPF, epf account, epf account login, epf transfer, pf transfer, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு
epfo latest tamil news, Employees' Provident Fund Organisation, epf transfer, epfo login, epfo member login, இபிஎஃப்ஓ, எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் நிறுவனம்

EPFO Tamil News: ஒரு தனிநபர் ஒரு நிறுவனத்தில் சம்பள அடிப்படையில் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அவர் வருங்கால வைப்பு நிதி நோக்கத்திற்காக பதிவு செய்யப்படுவார். அந்த நபர் மற்றும் அவரது நிறுவனம் அந்த பணியாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பு செய்ய தொடங்கும். அந்த நிதியை பணியாளர் எடுக்கும் வரை அதற்கு வட்டி சேரும். அந்த தனிநபர் குறிப்பிட்ட நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார் என்றால், அவர் தனது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை வட்டியுடன் எடுக்கலாம் அல்லது அந்த கணக்கில் உள்ள தொகையை தனது புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு தனது வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை தனது பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்துக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் (offline) மூலமாக மாற்றிக் கொள்ளலாம். Member e-Sewa portal வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்கள் தங்களது பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றுவதை அனுமதிக்கிறது. உங்களுடைய Universal Account Number (UAN) அப்படியே இருக்கும். ஆனால் உங்கள் பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்துக்கு உங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும்.

8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்? பிரபல வங்கி அதிரடி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை ஆன்லைன் மூலம் மாற்றுவதற்கான முன்நிபந்தனைகள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்கள் தங்களது UAN -Universal Account Number, Member e-SEWA portal லில் activate செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

Member e-SEWA portal லில் login செய்தபிறகு, தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களான பெயர், தொடர்பு விவரங்கள், திருமண நிலை போன்றவை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிநபர்கள் Member e-SEWA portal லில் தங்களது வங்கி கணக்கு எண், IFSC குறியீடு, ஆதார் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை நிறுவனங்கள் மற்றும் UIDAI யால் டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா (digitally approved) என்பதையும் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கு விவரங்கள் நிறுவனங்களால் டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும், மேலும் ஆதார் இணைக்கப்பட்டதும் UIDAI யால் சரிப்பார்க்கப்படும்.

இந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (EPF) ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி

1. ‘Unified Member Portal’ க்கு சென்று உங்களுடைய EPFO கணக்கிற்க்குள் UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.

2. ‘Online services’ க்கு சென்று ‘One Member – One EPF Account (Transfer request) ஐ தட்டவும்.

3. தற்போதைய வேலையின் ‘Personal Information மற்றும் ‘PF Account’ ஐ சரிப்பார்க்கவும்.

4. ‘Get details’ என்பதை சொடுக்கவும். முந்தைய நிறுவனத்தின் PF கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும்.

5. படிவத்தை attest செய்வதற்காக முந்தைய அல்லது தற்போதைய நிறுவனத்தை தேர்வு செய்யவும்.

6. UAN ல் பதிவு செய்யப்பட்ட உங்களுடைய கைபேசி எண்ணில் OTP ஐ பெறுவதற்கு ‘Get OTP’ என்பதை தட்டவும். OTP ஐ உள்ளீடு செய்து சமர்பிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo tamil news epfo member login epf transfer employees provident fund organisation

Next Story
8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்? பிரபல வங்கி அதிரடி!indianbank netbanbking online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com