EPFO Tamil News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈ.பி.எஃப்.ஓ) உறுப்பினர்கள், தனியார் துறையில் குறைந்தபட்சம் மாத சம்பளம் ரூ.15,000 முதல் பெற்றால், அவர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈ.பி.எஃப்) கணக்கிற்கு உரிமை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருவர் ஈபிஎஃப் திரும்பப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதில் வேலை இழப்பு, வேலையை சுவிட்ச் செய்து கொள்வது போன்ற நிகழ்வுகளும் அடங்கும்.
சில ஊழியர்கள் தங்களின் வேலை இழப்பு அல்லது வேலை மாறுதலுக்குப் பிறகு, அவர்களின் ஈபிஎஃப் கணக்கிற்கு உரிமை கோரமால் விட்டு விடுகிறார்கள். வரி மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ஈபிஎஃப் கணக்கு, அவரூக்கு 58 வயது ஆகும் வரை சம்பாதித்து தருகிறது என்றும், ஒருவரின் ஈபிஎஃப் கணக்கில் ஈபிஎஃப் வட்டி சம்பாதிப்பதன் மூலம் இது நிகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி என்னவென்றால், உங்கள் ஈபிஎஃப் கணக்கிற்கு நீங்கள் எந்த பங்களிப்பும் தராத போதும் கூட, உங்கள் கணக்கு தொடர்ந்து சம்பாதிக்கிறது. எனவே ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வேலையை இழந்து நிதி நெருக்கடியை எதிர்கொண்டால், ஈபிஎஃப் கணக்கை திரும்பப் பெறமால், அதற்கு பதிலாக வேறு வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் ஈபிஎஃப் கணக்கை திரும்ப பெற முயற்சி கடைசி விருப்பமாக இருக்க வேண்டும்.
வேலை சுவிட்ச் செய்யும் விஷயத்தில், ஒருவரின் ஈபிஎஃப் கணக்கை புதிய தேர்வாளரிடம் கொண்டு செல்வது நல்லது. இது ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் ஓய்வூதிய நன்மைக்கு தகுதியுடையவராக இருக்க உதவும். ஏனெனில் ஒருவரின் ஈபிஎஃப் கணக்கு பங்கு ஆதாயங்களையும் (இபிஎஸ்), நன்மையையும் பெற்றுத் தருகிறது. மேலும் ஈபிஎஃப் கணக்கை ஒருவர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்கும் போது, இந்த பங்கு ஆதாயங்கள் (இபிஎஸ்) மற்றும் நன்மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது
ஈபிஎஃப்ஒ கணக்கின் பங்கு ஆதாயங்கள் (இபிஎஸ்) மூலம் எவ்வாறு நன்மைகள் வருகிறது?
ஈபிஎஃப்ஒ விதிமுறைகளின்படி, ஊழியர் ஒருவர் அவரது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை ஈபிஎஃப் கணக்கில் ஈபிஎஃப் பங்களிப்பாக வழங்குகிறார். மேலும் ஆட்சேர்ப்பு செய்பவரும் ஈபிஎஃப் கணக்கில் அதே 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறார். ஆனால், ஆட்சேர்ப்பவர்களின் வைப்புத்தொகையில் 12 சதவீதத்தில் 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கில் செல்கிறது, மீதமுள்ள 3.67 ஈபிஎஃப் கணக்கில் செல்கிறது.
இருப்பினும், செயலில் உள்ள ஈபிஎஃப் கணக்குகளுக்கு மட்டுமே மேலே குறிப்பிட்ட விதிகள் பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஒரு ஈபிஎஃப் கணக்கு செயலற்ற நிலையில் இருந்தால், ஈபிஎஃப் அறிவித்த வருடாந்திர ஈபிஎஃப் வட்டி விகிதம் ஈபிஎஃப் நிலுவைத் தொகையைப் பெறுகிறது, மேலும் ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் 58 வயதாகும் வரை இது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.