Advertisment

மார்ச் மாதத்தில் உறுதி செய்யப்படும் வட்டி; PF கணக்கர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துமா புதிய அறிவிப்பு?

இ.பி.எஃப்.ஒ-வின் தலைமை முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவல் வாரியம் அடுத்த மாதம், பி.எஃப், கணக்கின் வட்டி விகிதம் குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.

author-image
WebDesk
New Update
மார்ச் மாதத்தில் உறுதி செய்யப்படும் வட்டி; PF கணக்கர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துமா புதிய அறிவிப்பு?

EPFO to take call on interest rate for 2021-22 in March: இ.பி.எஃப்.ஒ-வின் தலைமை முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவல் வாரியம் அடுத்த மாதம், பி.எஃப், கணக்கின் வட்டி விகிதம் குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.

Advertisment

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) CBT கூட்டம் மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெறும், அங்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் நிதியாண்டின் இறுதி என்பதால் பட்டியலிடப்படும் என்று மத்திய தொழிலாளர்கள் அமைச்சர் புபேந்திர யாதவ் பி.டி.ஐ.யிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வருமானத்தின் கணிப்பின் அடிப்படையில் வட்டியானது தீர்மானிக்கப்படும் என்று சி.பி.டி. தலைவராகவும் திகழும் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார். 8.5% வட்டி நீடிக்குமா என்று எழுப்பிய கேள்விக்கு இவர் அவ்வாறு பதில் கூறினார். 2020-21 ஆம் ஆண்டிற்கான EPF டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021 இல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் (CBT) முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது அக்டோபர் 2021 இல் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது, அதன்பிறகு, 2020-21 ஆம் ஆண்டிற்கான வட்டி வருவாயை 8.5 சதவீதமாக சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு கள அலுவலகங்களுக்கு பி.எஃப். அலுவலகம் வழிகாட்டுதல்களை வழங்கியது. ஒரு நிதியாண்டிற்கான EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்தவுடன் பரிந்துரை மற்றும் ஒப்புதல்களுக்காக அவை, நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே EPFO ​​வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மார்ச் 2020 இல், ஈபிஎஃப்ஓ 2018-19 க்கு வழங்கப்பட்ட 8.65 சதவீதத்திலிருந்து 2019-20 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் குறைந்த அளவாக 8.5% ஆக குறைத்தது. 2019-20 க்கு வழங்கப்பட்ட EPF வட்டி விகிதம் 2012-13 க்குப் பிறகு வழங்கப்பட்ட மிகவும் குறைவான வட்டி விகிதம் இதுவாகும்.

2016-17 ஆண்டுகளில் கணக்காளர்களுக்கு 8.65% வட்டியை வழங்கியது. 2017-18 காலகட்டங்களில் அது 8.55 ஆக இருந்தது. 2015-16 காலங்களில் வட்டியானது 8.8% என்ற உயர்ந்த பட்ச அளவில் இருந்தது. 2013 - 14 காலத்திலும், 2015-15 காலத்திலும் 8.75%ஆக இ.பி.எஃப்.ஒ சேமிப்பு கணக்கிற்கு வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil "

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment