ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. EPF-ல் ஒரு நபரின் பங்களிப்பு ஒரு நிதியாண்டில் ரூ .2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர் இந்த நிதியாண்டு 2021-22 முதல் இரண்டு தனி PF கணக்குகளை பராமரிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ளது.
CBDT யின் அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 2021 வரையில் நீங்கள் செய்த எந்தவொரு பங்களிப்புக்கும் வரி விதிக்கப்படாததாக இருக்கும். ஆனால் நடப்பு நிதியாண்டில் 2021 - 22 செலுத்தப்படும் தொகையில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டால், அதற்கு வரி விதிக்கப்படும். இதற்கு இரு கணக்குகள் பராமரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 202 முதல் நடைமுறைக்கு வரலாம் என CBDT சமீபத்தில் கூறியிருந்தது.
அடுத்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போதும் இந்த தகவலை நீங்கள் அளிக்க வேண்டும். ஒரு நபரின் கணக்கில் அவரது முதலாளி பங்களிக்கவில்லை என்றால், இந்த வரம்பு அவருக்கு ரூ .5 லட்சமாக இருக்கும்.
ஆண்டுக்கு ரூ .2.5 லட்சம் என்ற வரம்பு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரம்பு அரசு ஊழியர்களுக்கு அல்ல. அரசு ஊழியர்களுக்கு EPF மற்றும் VPF-க்கான பங்களிப்பு வரம்பு ரூ .5 லட்சம் ஆகும். அதாவது அரசு ஊழியரின் EPF மற்றும் VPF கணக்கில் ஆண்டுக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால், அவர்கள் அந்த கூடுதல் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்
இந்த விதி நடைமுறையில் இருப்பதால், ஒரு புதிய கணக்கைத் திறக்க ஊழியர் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் பங்களிப்பு 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், EPFO தானாகவே கணக்கைத் திறக்கும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் எடுக்கப்பட்ட பணத்தைக் கழித்த பிறகு வரி மீதான வட்டி கணக்கிடப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil