/tamil-ie/media/media_files/uploads/2021/11/epfo-2.jpg)
EPFO updates: இப்போது உங்களின் ஊழியர் வைப்பு நிதி கணக்கில் கே.ஒய்.சி. தகவல்களை அப்டேட் செய்வது மிகவும் எளியது. இது அரசு உங்களுக்கு வழங்கும் சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் இன்னும் கே.ஒய்.சி. தகவல்களை உங்களின் கணக்கில் இணைக்கவில்லை என்றால் இந்த வழிமுறைகளை பின்பற்றி உடனே அப்டேட் செய்து கொள்ளுங்கள்
EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். உங்களின் இ.பி.எஃப். கணக்கில் லாக் இன் செய்யுங்கள்.
அதில் மேனேஜ் என்ற பகுதியில் இருக்கும் கே.ஒய்.சி. பிரிவை தேர்வு செய்யுங்கள்
அதில் பான், வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளீடாக செலுத்துங்கள்
யு.ஏன்.என்னில் நீங்க இணைக்க விரும்பும் ஒவ்வொரு தகவல்களின் அடியில் இருக்கும் இதர தகவல்களையும் பூர்த்தி செய்யுங்கள்
உள்ளீடாக கொடுத்த தகவல்களை SAVE ஆப்சன் மூலம் சேமித்துக் கொள்ளுங்கல்
"KYC pending for approval" என்று உங்களின் கோரிக்கை இணையத்தில் காட்டும்.
இந்த தகவல்களை வேலை வழங்கும் நிறுவனம் ஏற்றுக் கொண்டவுன், "Digitally approved by the employer" என்ற அப்டேட் உங்களுக்கு கிடைக்கும்.
உங்களின் கே.ஒய்.சி. தகவல்கள் முறையாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு நீங்கள் உங்கள் நிறுவனத்தின் உதவியே இல்லாமல் உங்களின் பணத்தை இ.பி.எஃப்.ஓ கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.