eps pension scheme :தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்புநிதியாக சேமிக்கப்படுகிறது.
ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்திற்கு இணையான தொகை வேலை அளிக்கும் நிறுவனத்தாலும் இந்த சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இப்படி மாதந்தோறும் சேமிக்கப்படும் பணம், அந்த ஊழியர் பணி ஓய்வுபெற்ற பின்னர் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த பென்சனை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்கள் சம்பள கணக்கில் பிடிக்கப்படும் இபிஎஸ் பென்சன் தொகை சரியாக உங்கள் அக்கவுண்டில் வந்து சேர்கிறதா? என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு உங்களின் பிஎஃப் கணக்கிம் UAN நம்பரை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்தால் ஆன்லைனிலே இபிஎஸ் பென்சனை தொகையை தெரிந்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது ஆன்லைனிலே க்ளைம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து, அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் பென்ஷன் திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜிவன் சாந்தி மற்றொன்று என்பிஎஸ். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியும். இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன் அளிக்கிறது.
எல்ஐசி ஜிவன் சாந்தி திட்டத்தில் ஒரே அடியாக அதாவது ஒற்றைப் பிரீமியாக ஒரு பெறும் தொகையினை முதலீடு செய்து அதனைப் பென்ஷனாகப் பெறுவது ஆகும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை திரும்ப வழங்கப்படும்.
புது வீடு கட்ட 5 லட்சம் லோன்.. அதுவும் வட்டியில்லா கடன்! நீங்க ரெடியா?
ஜீவன் சாந்தி திட்டம் கீழ் 60 வயதில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தில் 70 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதில் பென்ஷன் வேண்டும் என்றால் 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 40 வயது என்றால் 86 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 30 ஆகும்.
இதே எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீட்டினை தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 50,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால் 30 வயது ஆகும் போது 29 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதாகிறது என்றால் 33 லடம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.