Advertisment

444 நாள்கள் முதலீடு; 9 சதவீதம் ரிட்டன்: இந்த எஃப்.டி திட்டம் தெரியுமா?

சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கு பொருந்தும். வங்கி 4 முதல் 10 ஆண்டுகள் கால வைப்புகளுக்கு 4 முதல் 9.01 சதவீதம் வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகளை விட தனியார் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன. மேலும், வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வரை அதிக வட்டி வழங்குகின்றன. அந்த வகையில் 9 சதவீதம் வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மேலும், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 750 நாள்கள் டெபாசிட்டுக்கு 9.21 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியை பொறுத்தமட்டில் 365 நாள்கள் (1 ஆண்டு) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதமும், சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் 2 ஆண்டுகள் 2 நாள்கள் டெபாசிட்டுக்கு 9.25 சதவீதமும் ரிட்டன் கிடைக்கும்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தமட்டில் 1001 நாள்கள் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி கிடைக்கும்.

புதிய வட்டி விகிதங்கள்

இதில் சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அண்மையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கு பொருந்தும். வங்கி 4 முதல் 10 ஆண்டுகள் கால வைப்புகளுக்கு 4 முதல் 9.01 சதவீதம் வட்டி வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment