நாம் அனைவருமே எதிர்காலத்திற்காக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சேமித்து வருகிறோம். குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வு காலத்திற்கு பிறகான தேவைக்காக என சேமிக்க வேண்டியுள்ளது. நாம் செய்யும் முதலீடு லாபம் தரக்கூடியதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். சராசரி முதலீட்டாளர்களை பொருத்தவரை பங்கு முதலீட்டின் பலனை பெற, மியூச்சுவல் பண்ட் முதலீடே சிறந்த வழி. நீண்டகாலத்திற்காக சேமிக்க தொடங்கவில்லை என்றால் இன்றே மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
பென்சன் போன்ற தொகை இல்லாவிட்டால் கடைசிக் காலத்தில் சேமிப்புத் தொகை கையில் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 12 சதவீதம் வரையில் ரிட்டன் கிடைப்பதால் இந்த வகை திட்டங்களில் முதலீடு செய்யும்படி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் மாதம் ரூ.5,000 சேமித்தால் 20 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கிடைக்கும். இதில் உங்களது முதலீட்டுப் பணம் ரூ.12 லட்சம் மட்டுமே. எஞ்சிய தொகை அனைத்தும் லாபமாகக் கிடைக்கும். மாதம் ரூ.5,000 சேமிப்பதற்குப் பதிலாக ரூ.10,000 சேமித்தால் உங்களுக்கு ரூ.1 கோடி வரையில் கிடைக்கும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட காலக்கெடுவில், தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது.ஒரு SIP ஐ 10, 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு கூட எடுக்கலாம், அது உண்மையில் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். ஒருவர் மாதம் ரூ.3000 என 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்வு தொகை ரூ.1 கோடிக்கு மேல் கிடைக்கும்.
25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 என்று சேமித்து வந்தால் ரூ.95 லட்சமும், ரூ.10,000 சேமித்து வந்தால் ரூ.1.9 கோடியும் கிடைக்கும். 12 சதவீத வட்டியில் இந்த லாபத்தை உங்களால் பெற முடியும். கடந்த சில மாதங்களாகவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நல்ல ரிட்டன் கிடைத்துள்ளதால் இந்த லாபத்தை ஈட்ட முடியும். உங்களது சேமிப்பு இலக்கு எவ்வளவு என்பதையும், அப்போது செலவுகள் எவ்வளவு இருக்கும் என்பதையும் நீங்கள் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். உங்களது குழந்தைக்கான கல்விச் செலவுக்காக நீங்கள் சேமிக்க நினைத்தால் 20 ஆண்டுகள் கழித்து அதற்கான செலவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதையும் மதிப்பிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"