/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2022-06-29T112002.361-1-2.jpg)
தங்கத்தில் முதலீடு
மஞ்சள் உலோகமான தங்கம் கடந்த சில வாரங்கள் அதிக ஏற்றம் இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் கிராம் ரூ.100 அதிகரித்ததுடன், கிராம் ரூ.80 சரிவையும் கண்டது.
தற்போது 24 காரட் தங்கம் கிராம் ரூ.6071 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.48568 எனவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5550 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.44,400 எனவும் வர்த்தகமாகிவருகிறது.
கடந்த காலங்களில் கிராம் 67 ஆக இருந்த வெள்ளி தற்போது கிராம் ரூ.76 ஆக உள்ளது. அதாவது கிலோ பார் வெள்ளி ஒரே மாதத்தில் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
இச்சூழலில் தங்கம், வெள்ளி வாங்கலாமா வாங்கக் கூடாதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விலை குறைந்த காலங்களில் தங்கம் வாங்கலாம் என சிலர் முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இனிவரும் வாரங்களில் நடப்பு கணக்கு பற்றாக்குறை, உலகளாவிய பொருளாதார தாக்கம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயரக் கூடும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தங்கம் வரும் காலங்களில் ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் என கணித்தனர். ஆனால் அப்போது ஒரு சவரன் தங்கம் ரூ.38 வரையிலேயே இருந்தது. அந்த வகையில் பார்க்கும்போது தங்கம் ஒரு சவரன் கிட்டத்தட்ட 6 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
எனினும் மற்ற சில முதலீட்டாளர்கள் தங்கம் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் சரிந்து காணப்பட்டது. இருப்பினும், இந்திய சந்தைகளில் உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு முதலீட்டு ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன.
இருப்பினும், தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால் வேறு முதலீட்டு வழியை தேர்ந்தெடுப்பது நல்லது எனக் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.