ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்

ஆப்பிள், சாம்சங், பிளாக்பெர்ரி, மைக்ரோசாஃப்ட், ஏர்டெல், சாவ்ன், லெனவோ, ஓப்போ போன்ற 52 நிறுவனங்களுடன் டை -அப் வைத்திருந்த பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்காக பேஸ்புக்குடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 52 நிறுவனங்களின் பெயர்கள் வெளியீடப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், பேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் 2000 கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கான பதில்களை 750 பக்க ஆவணமாக தயாரித்து அமெரிக்காவின் எனெர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டி சேர்மேன் க்ரக் வால்டன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணம் ஜூன் 29ம் தேதி, 2018ல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிடிஎஃ வடிவம் தற்போது இணையத்தில் பார்வைக்கு கிடைக்கின்றது.

உலகில் இருக்கும் 52 நிறுவனங்கள் பேஸ்புக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பயன்படுத்தி தங்களுடைய பொருட்கள் மற்றும் செயலிகளை விற்பனை செய்திருக்கின்றது.

அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இது குறித்து ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தது. அதன் படி, பேஸ்புக்கின் உள்கட்டுமான அமைப்பினை பலப்படுத்துவதற்காக சில தகவல்களை சாம்சங், ஆப்பிள், பிளாக்பெர்ரி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இதனை அடுத்து, ஓப்போ மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களிடமும் தகவல் பரிமாற்றம் நடத்தியதை ஒப்புக் கொண்டது பேஸ்புக்.

இந்த 52 நிறுவனங்களில் 38 நிறுவனங்கள் தற்போது பேஸ்புக்குடன் எந்த விதமான ஒப்பந்தங்களிலும் இல்லை. ஆரம்பத்தில் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஆப் டெவலப்பராக பேஸ்புக்குடன் இணைந்து, பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பெற்றுள்ளது. ஏர்டெல் உடனான அந்த ஒப்பந்தம் 2010ல் தொடங்கி 2013ல் முடிவடைந்தது.

மீதம் இருக்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் ஜூலை 2018ல்  முடிவடைகிறது. மற்றொரு நிறுவனத்துடனான ஒப்பந்தம் அக்டோபர் 2018ல் முடிவடைகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் எப்போதும் போல் தொடரும் என்று கூறியிருக்கின்றது பேஸ்புக் நிறுவனம். ஆப்பிள் நிறுவனம் ஒரு போதும் பேஸ்புக்கில் இருந்து தகவல்களை எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஆப்பிளின் தலைமை செயலாளர் டிம் குக்.

பேஸ்புக்குடனான மிக முக்கிய தகவல் பரிமாற்ற செயல்களில் ஈடுபட்ட சில முக்கிய நிறுவனங்கள் ஏசெல், அலிபாபா, அமேசான், டிசில், ஆப்பிள், டெல், கார்மின், எச்டிசி, கொடாக், எல்ஜி, மீடியா டெக், மோட்டோரோலா, லெனோவா, மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், சோனி, வோடஃபோன், குவால்கம், யாஹூ போன்றவைகள் ஆகும்.

சாவன் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ல் போடப்பட்டது, மிக சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள சாவன் நிறுவனத்தின் 60 செயலிகள் பேஸ்புக்குடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close