FasTag: எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கட்டணச் சலுகை?

FASTag அட்டையின் டிமாண்ட் அதிகரித்து இருப்பதால், பல தனியார் பின்டெக் நிறுவனங்கள் டிஸ்கவுன்ட் அறிவித்து வாடிகையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

how to get fastag, how to buy fastag, recharge fastag,Discounts For FASTag
how to get fastag, how to buy fastag, recharge fastag,Discounts For FASTag

FASTag அட்டை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய அரசு  வரும் 15ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இதனால் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு FASTag அட்டை இல்லாமல் டோல் பிளாசா வழியாகச் செல்லும்போது கட்டணங்கள் இரண்டு மடங்காக வசூலிக்கப்படும்.

வாகன வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த FASTag அட்டையை வாங்குவதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த அட்டையின் விலை பொதுவாக ரூ.100 வரை இருக்கும். இந்த அட்டையின்  மூலமாக நாம் ரீசார்ஜ் செய்யவேண்டும் (கிட்டத்தட்ட நமது சிம் கார்டு போன்று).

FASTag அட்டையின் டிமாண்ட் அதிகரித்து இருப்பதால், பல தனியார் பின்டெக் நிறுவனங்கள் டிஸ்கவுன்ட் அறிவித்து வாடிகையாளர்களை கவர்ந்து வருகின்றனர். இதனால், அது குறித்த முழு தகவல்களை  இங்கே காணலாம்.

முதலில் FASTag அட்டை என்றால் என்ன?  

FASTag அட்டை, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், FASTag ப்ரீபெய்டு அல்லது இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக, நாம் டோல்கேட்களில் வாகனங்களை நிறுத்தவேண்டிய அவசியம் இனி இல்லை. மெட்ரோ ஸ்மார்ட் கார்டு போன்று இந்த FASTag அட்டை செயல்பட உள்ளது.

FASTag அட்டையை ப்ரீபெய்ட் வாலட் ஆகவோ அல்லது டெபிட்/ கிரெடிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். FASTag அட்டையை, நமது வங்கிக்கணக்கில் இணைத்துக்கொண்டால், நாம் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை. அதற்குப்பதிலாக, நாம் ஒவ்வொரு முறையும் டோல்கேட்டை கடக்கும்போதும், நமது வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

FASTagயை எப்படி வாங்குவது?

அமேசான், பேடிஎம் உள்ளிட்ட இ காமர்ஸ் போர்டல்கள், 22 வங்கிகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 27 ஆயிரம் பாயின்ட் ஆப் சேல் மையங்கள், டோல் பிளாசாக்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்கள், போக்குவரத்து அலுவலகங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளில், FASTag அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

My FASTag app என்ற ஸ்மார்ட்போன் செயலியின் மூலமும் FASTag அட்டையை பெறலாம்.

NHAI மூலமாக விற்பனை செய்யப்படும் FASTag, ஒருமுறை கட்டணமாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் திரும்பபெறத்தக்க வகையிலான டெபாசிட் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

அறிவிக்கப்பட்ட டிஸ்கவுண்டுகள் : 

NHAI பூத்களின் மூலம் விற்பனை செய்யப்படும் FASTag அட்டைகளின் பயன்பாட்டின் போது 2.5 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

பேடிஎம் செயலியில் இந்த FASTag அட்டை கட்டணம் எதுவுமின்றி கிடைகின்றது, இருந்தாலும் வாடிக்கையாளர்  ஒருவர் ரூ.400 ரீசார்ஜ் செய்யவேண்டும்.  இந்த 400 ரூபாயில் இதில் டெபாசிட் கட்டணம் ரூ.150 கவும் (ரீபன்ட்), மினிமம் பேலன்ஸாக  ரூ.250ம் இருக்கும். மேலும் , பேடிஎம் செயலியில் ஒரு FASTag  அட்டை வாங்கினால் ரூ.150 மதிப்பிலான தியேட்டர் டிக்கெட்டுகளை இலவசமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடு கழித்து பார்த்தால், உங்கள் மொத்த செலவு ரூ. 250 (ரூ.150 டெபாசிட் கட்டணம் தான் )

ஐசிஐசிஐ வங்கியில்: 

FASTag அட்டையைப் பொறுத்த வரையில் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.500 வரை செலவாகும்.   FASTag அட்டைக்கு ரூ.100, ரீபன்ட் டெபாசிட் கட்டணம் ரூ. 200 , மினிமம் ரீசார்ஜ் கட்டணம் ரூ. 200.

எஸ்.பி.ஐ வங்கியில்: 

FASTag அட்டையைப் பொறுத்த வரையில் எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.400 வரை செலவாகும். FASTag அட்டைக்கு ரூ.100, ரீபன்ட் டெபாசிட் கட்டணம் ரூ. 200 , மினிமம் ரீசார்ஜ் கட்டணம் ரூ. 200.

டோல்கேட்டுக்கு அருகில் வசிப்பவர்களும் டோல்கேட்டை கடக்க ஏதாவது சலுகைகள் உள்ளதா?

டோல்கேட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்கள், தங்களது இருப்பிட சான்றிதழை பாயின்ட் ஆப் சேல் மையத்தில் வழங்கி அதை சரிபார்க்கப்பட்டபின், FASTag கட்டணத்தில் இருந்து சில சலுகைகளை பெறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fastag mandatory from december 15 discounts and cashback for fastag card paytm fastag ticket movie free

Next Story
லாக்கரில் உள்ள பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல; வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஆர்பிஐ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express