Fastag news in Tamil : இன்னும் உங்கள் வாகனத்திற்கு பாஸ்ட் டேக் இல்லையா? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூபாய் 20 கோடியை பாஸ்ட் டேக் இல்லாதவர்களிடம் இருந்து வசூலித்துள்ளது. சுங்க சாவடிகளில், பாஸ்ட் டேக் (FASTag) ஒட்டிய வாகனங்கள் செல்ல வேண்டிய பாதையில் பாஸ்ட் டேக் ஒட்டாமல் சென்ற 18 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India NHAI) ரூபாய் 20 கோடியை வசூலித்துள்ளது என ஒரு பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. மின்னணு கட்டணம் வசூலிக்கும் இந்த நடைமுறை கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
ரெப்போ ரேட் என்றால் என்ன?
ஏற்கனவே பாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், பாஸ்ட் டேக் ஒட்டாதவர்களை தடுக்கும் விதமாகவும் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களிடம் பாஸ்ட் டேக் ஒட்டுவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூல் மையங்களில் உள்ள பாஸ்ட் டேக் பாதைகளில் பாஸ்ட் டேக் ஒட்டாத வாகனங்கள் செல்லும் போது அவ்வாகன ஓட்டுனர்களிடம் சுங்க கட்டணம் இரண்டு மடங்காக வசூலிக்கப்படுகிறது, என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல பாயிண்ட் ஆப் சேல் (Point of Sale) இடங்கள் மூலம் 1.55 கோடி பாஸ்ட் டேக் கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஸ்ட் டேக் பரிவர்த்தனை ஒரு நாளைக்கு 4 மில்லியனுக்கும் அதிகம் என்ற அளவிலான மைல்கல்லை எட்டியுள்ளது.
மேலும் படிக்க : தனி நபர் கடன்: உங்கள் தேவையை அதிகம் புரிந்து கொண்ட வங்கி எது?
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள Radio Frequency Identification (RFID) சார்ந்த பாஸ்ட் டேக் ஒரு மின்னணு கட்டண வசூல் முறை. நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இது தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் பயனத்தை எளிதாக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது.
பாஸ்ட் டேக் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாக தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் பயனாளர்கள் சுமுகமாக எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் பயணிக்க முடிகிறது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகிறது. பயணிகளால் பாஸ்ட் டேக் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைத்து சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டண வசூலிப்பதில் ஒரு வெளிப்படைத்தன்மை வந்துள்ளது என்பதை காட்டுகிறது, என அது மேலும் தெரிவிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்