ஃபிக்ஸட் டெபாசிட்: அதிக வட்டி தரும் டாப் 6 வங்கிகள் எவை தெரியுமா?
நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா? பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றை விரும்புகிறவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD) ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.
நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா? பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றை விரும்புகிறவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD) ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் திறக்கும் முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் முக்கியம். இது உங்களுக்கு அதிகபட்ச வருமானத்தை பெற உதவும். இங்கு, 5 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 6 முன்னணி வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
இதில் அதிக வட்டி விகிதங்களை பெற, உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது. இது கூட்டு வட்டியின் (compounding) பயனை அளிக்கும். அதாவது, முதல் ஆண்டு நீங்கள் ஈட்டும் வட்டி அடுத்த ஆண்டு அசல் தொகையுடன் சேர்ந்து, அதன் மீதும் வட்டி கிடைக்கும்.
5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank): இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பொதுமக்களுக்கு 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.65% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியையும் வழங்குகிறது.
Advertisment
Advertisements
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank): மற்றொரு முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, 5 ஆண்டு கால டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 6.75% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் (basis points) சேர்த்து 7.25% வட்டியையும் வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): கோடக் மஹிந்திரா வங்கி, பொது மக்களுக்கு 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.2% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.7% வட்டியையும் அளிக்கிறது.
எஸ்.பி.ஐ (State Bank of India - SBI): இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, பொது மக்களுக்கு 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.3% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு "SBI We-care" டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் சேர்த்து 7.30% வட்டியையும் வழங்குகிறது.
பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): இந்த பொதுத்துறை வங்கி, 5 ஆண்டு டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 6.55% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியையும் வழங்குகிறது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India): யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பொது மக்களுக்கு 5 ஆண்டு டெபாசிட்களுக்கு 6.5% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7% வட்டியையும் அளிக்கிறது.
வங்கிபெயர்
பொதுமக்களுக்கானவட்டி (%)
மூத்தகுடிமக்களுக்கானவட்டி (%)
ஹெச்.டி.எஃப்.சிவங்கி
6.65
7.15
ஐ.சி.ஐ.சி.ஐவங்கி
6.75
7.25
கோடக்மஹிந்திராவங்கி
6.2
6.7
எஸ்.பி.ஐ
6.3
7.3
பாங்க்ஆஃப்பரோடா
6.55
7.15
யூனியன்பாங்க்ஆஃப்இந்தியா
6.5
7
ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலம் நீங்கள் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, உங்கள் வருமான வரி வரம்புக்கு ஏற்ப இந்த வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். எனவே, அதிக வரி வரம்பில் உள்ளவர்கள், ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன் வரி விளைவுகளை கருத்தில் கொள்வது நல்லது.