Federal Bank FD Rates: ஃபெடரல் வங்கி தனது நிறுவனரை கௌரவிக்கும் வகையில் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 400 நாள்கள் காலக்கெடு கொண்ட இந்தத் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 8.15 சதவீதம் வட்டி கிடைக்கும்.
அதேநேரத்தில் பொதுமக்கள் 7.65 சதவீதம் வரை வட்டி பெறலாம்.
மேலும் இந்த சிறப்பு வட்டி விகிதங்கள் பண்டிகைக் காலத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபெடரல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
7 முதல் 29 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 3.00% வட்டி விகிதத்தை வழங்கும். தொடர்ந்து, 30 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதமும், 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு 4.00% வட்டியும், 61 நாள்கள் முதல் 119 நாள்கள் வரை வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு 4.75% வட்டியும் கிடைக்கும்.
மேலும், 120 நாள்களில் இருந்து 180 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.00% ஆகவும், 181 நாள்களில் இருந்து 270 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.
271 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.00% வட்டி விகிதத்தையும், ஒரு வருடம் முதல் 13 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 6.80% சதவீதமும் கிடைக்கும்.
இந்த நிலையில், 13 மாதங்கள் முதல் 399 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.30% வட்டியும், 400 நாள்கள் டெபாசிட்டுகளுக்கு 7.40% வட்டியும், 401 நாள்கள் முதல் 21 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.30% வட்டியும் கிடைக்கும்.
தொடர்ந்து, 21 மாதங்களுக்கு மேல் முதிர்ச்சியடையும், அதேவேளை 2 ஆண்டுகளுக்கு குறைவாக டெபாசிட்களுக்கு 6.75% வட்டி கிடைக்கும்.
வங்கி நிதிநிலை அறிக்கை
தனியார் துறை கடன் வழங்குநரான ஃபெடரல் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ. 16.72% உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (GNPA) Q1FY24 இல் 2.38 சதவீதத்திலிருந்து 2.26 சதவீதமாக உள்ளது. வங்கியின் நிகர லாபம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“