வீண் அலைச்சல் வேண்டாம்! வீட்டில் இருந்தப்படியே Income tax கட்டலாம் எப்படி தெரியுமா?

How to File Income Tax Return 2019 Online: முழு விபரங்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

income tax filing last date
income tax filing last date

 Income Tax Return Filing : வருமான வரி ரிட்டர்ன்ஸ் என்பது நடப்பு ஆண்டின் வருமானம் தொடர்பான வரி விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்கும் முறை. உங்களுடைய ஒட்டுமொத்த ஆண்டு வருமானம், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் வருமான் வரி கட்ட வேண்டும்.

இதே விதி பிரிக்கப்படாத குடும்பங்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் பொருந்தும். நிறுவனங்கள், வெளிநாட்டில் சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் அவர்களுடைய மொத்த வருமானத்துக்கும் வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது கட்டாயமாகிறது.தனிநபர்களுக்கு வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய ஜூலை 31 தான் கடைசி நாள். வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அதற்கான பதில்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Steps to File Income Tax Return Online 2019-20: ஆன்லைனில் வருமான வரி தாக்கல்.

வரி செலுத்த வேண்டிய முறைகள் :Income Tax filing

1. வங்கியின் நெட் பேங்கிங் கணக்கிற்கு செல்ல வேண்டும்.

2. http://www.incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பே டாக்சஸ் ஆன்லைன் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் வரும் சலானை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதற்கான உதவிகளும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. பின் வருமான வரியை செலுத்த வேண்டும்.

5. வருமான வரியை செலுத்தியவுடன் உடனடியாக அதற்கான ரசீது அதாவது கவுன்டர்ஃபாயில், சிஐஎன்-னோடு (சலான் ஐடன்டிபிகேஷன் நம்பர்) திரையில் வரும்.

6. சிஐஎன்- எண்ணை வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும். கவுன்டர்ஃபாயிலை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் மேலும் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

7. நாம் செலுத்திய தொகை டாக்ஸ் இன்பர்மேசன் நெட்வொர்க்கை சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

read more.. யாரெல்லாம் Income tax கட்ட வேண்டும்? உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா? மிஸ் பண்ணாம படிங்க!

தேவையான ஆவணங்கள் :

ஐடிஆர் ரிட்டன்ஸ் படிவங்களை சமர்ப்பிக்கும் போது, எந்த விதமான ஆவணங்களும் இணைக்கப்படத் தேவையில்லை. முதலீடு செய்ததற்கான சான்று, டி.டீ.எஸ் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டிய தேவையில்லை. ஐ.டி.ஆர் படிவத்தை நேரடியாக சமர்ப்பித்தாலும் ஆன்லைனில் சமர்ப்பித்தாலும் எந்த விதமான ஆவணமும் இணைக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இந்த ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் விசாரணைக்காக ஆவணங்களைக் கேட்க்கக் கூடும்

முக்கியமான ஆவணங்கள் ஃபார்ம் 16, முதலீட்டிற்கான ஆதாரங்கள், வீட்டு வாடகைக்கான ரசீதுகள், காப்பீடு ரசீதுகள், கடன் திருப்பி செலுத்தும் ஆவணங்கள், மருத்துவ ரசீதுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

மறந்து விடாதீர்கள்:

வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது.

எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களைத் தயார் செய்ய முடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது தவறாமல் பான் எண் மற்றும் எந்த நிதி ஆண்டுக்கானது என்பதை குறிப்பிட வேண்டும்.

நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால் குறித்த தேதிக்குள் நேரில் ஆஜராகிவிட வேண்டும். இல்லையென்றால் வீண் அபாரதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆவணங்களை பரிசோதிக்கும் வருமானவரி அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை ஏற்கவும் மறுக்கவும் சாத்தியம் உண்டு என்பதால் எப்போதும் சரியான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: File itr online steps file income tax return online 19

Next Story
மினிமம் பேலன்ஸ் குறித்து பிரபல வங்கிகளின் அறிவிப்பு!minimum balance rules
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com