நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, மத்திய அரசு உதவு முன்வந்துள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
அந்த செய்தியில், இந்திய மக்கள் அனுபவிக்கும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ30,628 வழங்க நிதியமைச்சகம் முடிவு செய்ததுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணத்தை பெற இந்த லிங்கில் ரெஜிஸ்டர் செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிந்து தகவல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிக் கணக்கில் ரூ30,628 கிடைக்கும் என்கிற செய்தி போலியானது என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 'https://bit.ly/3P7CiPY' என்ற இணைப்பைக் கொண்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி அமைச்சகத்தின் சார்பில் ரூ30,628 நிதி உதவி வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் போலியானது. இதுதொடர்பாக எவ்வித அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும், வைரல் மெசேஜில் வரும் இத்தகை லிங்க்-களை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், 'பிரதம மந்திரி நாரி சக்தி யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் ரூ. 25 லட்சம் கடனுடன் ரூ. 2.20 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறப்படும் மற்றொரு திட்டம் தொடர்பாக பரவிய தகவலையும் PIB ஆராய்ந்தது. அதில், அத்தகைய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil