Advertisment

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்.. சிவப்பு கொடி காட்டும் நிதி அமைச்சகம்

உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (மார்ச் 20) ஓய்வூதியதாரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் மூன்று சம தவணைகளில் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.

author-image
WebDesk
New Update
Finance Ministrys red flag One-time payment of OROP dues could have had fiscal implications

, திங்களன்று, உச்ச நீதிமன்றம் ஓய்வூதியதாரர்களுக்கான OROP நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் மூன்று சம தவணைகளில் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.

ஒரு பதவி ஒரே ஓய்வூதியத்திற்கான (OROP) நிலுவைத் தொகையை முன்பணமாக செலுத்துவது, நிதி தாக்கங்களைத் தூண்டக்கூடியதாக இருக்கலாம் என நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
OROP-ஐ தவணை முறையில் செலுத்துவதற்கான இந்த முடிவு, கடன் வாங்குவது குறித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் உள்ளது.

Advertisment

இந்த விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு 36,325 கோடி உர மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கான துணை கோரிக்கைகளில் கவனம் செலுத்திவருகிறது.

இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் யுத்தம் மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் பின்னர் அரசாங்கத்தின் நிதிக் கணக்கீடுகள் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன.
OROP க்கான திருத்தம் 2019 இல் இருந்தபோதிலும், தொற்றுநோய்களின் போது அரசாங்க கொடுப்பனவுகளுக்கான பிற திருத்தங்களும் தாமதமாகின.

மேலும், “இந்திய அரசாங்கத்திற்கு நிதி ரீதியாக மிகவும் மோசமான ஆண்டுகளில் இருந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கூட, அகவிலைப்படி தவணைகள் நிறுத்தப்பட்டன," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கான பட்ஜெட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய பலன்கள் ரூ.1.38 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு FY24 க்கு ரூ.71,701 கோடியாக உள்ளது. 2013-14 மற்றும் 2023-24 க்கு இடையில் 12 சதவீத வருடாந்திர விகிதத்தில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓய்வூதிய செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சகத்தின் பட்ஜெட்டில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

OROP இன் கீழ் உள்ள ஓய்வூதியங்கள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்படும், மற்ற ஓய்வூதியம் அல்லது அரசாங்க கொடுப்பனவு திருத்தங்களைப் போலல்லாமல், இது ஊதியக் குழுவின் போது மட்டுமே திருத்தப்படும், இதனால் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதிச் செலவாகிறது, இந்த விஷயத்தை அறிந்த ஒருவர் கூறினார்.

டிசம்பர் 2022 இல், ஜூலை 1, 2019 முதல் OROP ஓய்வூதியத்தை திருத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 25.13 லட்சத்திற்கும் அதிகமான (4.52 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளிகள் உட்பட) ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இந்த திருத்தத்தின் மூலம் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, சிறப்பு/தாராளமயமாக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் வீர விருது பெற்றவர்கள் உட்பட குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தவிர, நான்கு அரையாண்டு தவணைகளில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அரசு கூறியிருந்தது.

ஜூலை 2019 முதல் நிலுவைத் தொகை ரூ. 28,138 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, 2022-23 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அதே தொகைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, OROP நடைமுறைப்படுத்துவதற்காக எட்டு ஆண்டுகளில் சுமார் ரூ.57,000 கோடி (ஆண்டுக்கு ரூ.7,123 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம், OROP நிலுவைத்தொகை நான்கு அரையாண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் குழு ஒன்று எஸ்சியில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்பு அமைச்சகம் தனது உத்தரவை திரும்பப் பெறுமாறு SC கேட்டுக் கொண்டது, கடந்த ஆண்டு அதன் தீர்ப்புக்கு "முரணானது" என்று கூறி, அனைத்து நிலுவைத் தொகைகளையும் மூன்று மாதங்களுக்குள் விடுவிக்கக் கோரியது.

இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் (2016 இல்) நிறுவப்பட்டதில் இருந்து நான்கு லட்சம் பணியாளர்கள் இறந்ததாக பெஞ்ச் குறிப்பிட்டது.

இந்த நிலையில், திங்களன்று, உச்ச நீதிமன்றம் ஓய்வூதியதாரர்களுக்கான OROP நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் மூன்று சம தவணைகளில் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.

தொடர்ந்து, ஆறு லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் வீர விருது வென்றவர்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தவும், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஜூன் 30, 2023க்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

மீதமுள்ள ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத் தொகையை தொடர்ந்து செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Defence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment