/indian-express-tamil/media/media_files/2025/05/31/BsLtNQaZbkpM4LM2SZYM.jpg)
நாளை (ஜூன் 1) முதல், உங்கள் அன்றாட நிதி திட்டத்தை பாதிக்கும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவுள்ளன. புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள் முதல் ஆதார் இலவச புதுப்பிப்பின் காலக்கெடு வரை முக்கிய மாற்றங்களை இதில் காணலாம்.
1. கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கான புதிய விதிகள்
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்கள். ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. மின்சாரம் அல்லது தண்ணீர் போன்ற உங்கள் பயன்பாட்டு பில்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். உதாரணமாக, இது உங்களின் மாத உச்சவரம்பை மீறினால், எரிபொருள் கட்டணத்தில் அதன் மதிப்பின் மீதான 1 சதவீத கட்டணத்தை கோடக் மஹிந்திரா வங்கி விதிக்கும்.
மேலும், உங்கள் auto-debit கட்டணம் நிறைவேறவில்லை என்றால், அபராதம் 2 சதவீதமாகக் குறையலாம். இது முன்னர் இருந்ததை விடக் குறைவு. சர்வதேச பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் வெகுமதிப் புள்ளிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
2. ஏ.டி.எம் கட்டணங்கள்
ஏ.டி.எம்-களை அதிகமாக பயன்படுத்துபவர்கள், கட்டண உயர்வுக்கான சாத்தியக்கூறுகளுக்குத் தயாராக இருங்கள். ஜூன் 1 முதல், உங்கள் வங்கியின் இலவச வரம்பிற்கு மேல் பணம் எடுப்பது அதிக விலை உயர்ந்ததாக மாறலாம். ஒவ்வொரு வங்கிக்கும் அதன் சொந்த விதிமுறைகள் உள்ளன. எனவே கூடுதல் பணம் எடுப்பதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை அவர்களின் இணையதளம் அல்லது செயலியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
3. LPG சிலிண்டர் விலை அப்டேட்
வழக்கம் போல், வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலைகள் ஜூன் 1 அன்று திருத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், விலைகள் அதிகரிக்கலாம், குறையலாம் அல்லது மாறாமல் இருக்கலாம். உங்கள் சமையலறை செலவுகளை வியூகம் வகுக்க நாளைய செய்திகளைப் பாருங்கள்.
4.வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைப்பு
சில வங்கிகள் ஜூன் 1 முதல் எஃப்.டி (வைப்பு நிதி) வட்டி விகிதங்களைக் குறைக்கின்றன. உதாரணமாக, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, வட்டி விகிதங்களை 60 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கிறது. தற்போது, எஃப்.டி வட்டி விகிதங்கள் 6.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை உள்ளன ஆனால், ஆர்.பி.ஐ கொள்கைகள் மற்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் அவை மாறலாம்.
5. ஆதார் இலவசப் புதுப்பிப்பு
உங்கள் ஆதார் தகவலை புதுப்பிக்க வேண்டுமானால், விரைவாக செய்யவும். myAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 14, 2025 ஆகும். அதன் பிறகு, ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்க ரூ. 25 மற்றும் ஆதார் மையங்களில் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க, கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டிஎம் கட்டணங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது செயலியைச் சரிபார்க்கவும். சமீபத்திய ஆர்.பி.ஐ விதிகளை அறிய https://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். LPG விலைகளுக்கு, ஜூன் 1 அன்று செய்திகளைப் பார்க்கவும். ஆட்டோ டெபிட் செலுத்துதல்களில் சிக்கல்கள் இருந்தால் அல்லது குறிப்பிட்ட வங்கி தொடர்பாக உதவி தேவைப்பட்டால், அவர்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.