நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு எதிராக தங்கம் சிறந்த முதலீடு ஆகும். இந்தியாவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒருவர் நிதி நெருக்கடியில் இருக்கும்போது தங்கத்தை அடகு வைத்து கூட பணத்தை ஏற்பாடு செய்துக் கொள்ளலாம். சில நேரங்களில் விற்றும் பணமாக்கிக் கொள்ளலாம்.
சந்தையில் தங்கத்தை விற்பதா அல்லது தங்கக் கடன் வாங்குவதா? சிறந்த வழி என்ன?
தங்கக் கடன்
வங்கிகளும் NBFC களும் தங்க வைப்புத்தொகைக்கு எதிராக கடன் வசதியை வழங்குகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தினால், வங்கியிலிருந்து தங்கத்தை திரும்பப் பெறலாம்.
வழக்கமாக, தங்கக் காசுகள், பிஸ்கட்கள் மற்றும் நகைகள் போன்ற தங்கப் பொருட்களுக்கு 18K முதல் 24K தூய்மையுடன் தங்கக் கடன் அனுமதிக்கப்படுகிறது.
பெரும்பாலான வங்கிகள் தங்கக் கடனை அதன் தற்போதைய சந்தை மதிப்பில் 75% வரை அனுமதிக்கின்றன. எனவே, நீங்கள் வங்கியில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாக இருந்தால், அதன் மீது ரூ.1.5 லட்சம் வரை கடனாக வங்கி வழங்கும்.
சந்தையில் தங்கத்தை விற்பனை செய்வது எப்படி?
நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கும்போது தங்கத்தை அடகு வைப்பதை விட சந்தையில் தங்கத்தை விற்பது பணத்தை ஏற்பாடு செய்வதற்கான எளிதான வழியாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆபரணத்தை வாங்கிய எந்த நகைக்கடை அல்லது நகைக்கடைக்காரருக்கும் தங்கத்தை மறுவிற்பனை செய்யலாம்.
என்ன செய்ய வேண்டும்?
எதிர்காலத்தில் தங்கத்தின் விலை உயரும் என நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் தங்கக் கடனைப் பெறலாம், ஏனெனில் வங்கியில் எல்டிவியைப் பராமரிப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
திருப்பிச் செலுத்திய பிறகு, உங்கள் தங்கத்தின் மதிப்பு நீங்கள் வங்கியில் அடகு வைத்ததை விட அதிகமாக இருக்கும். மறுபுறம், தங்கத்தின் விலை குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதை சந்தையில் விற்பது நல்லது.
ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் நிதி நிலைமை மீண்டும் சீராகும் போது அதை குறைந்த விலையில் மீண்டும் வாங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.