ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு ஆன்லைன் சேவைகளை எளிதாக்குவதில் ஆதார் அட்டை இப்போது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும்.
அத்தகைய முக்கிய தகவல்களை கொண்ட ஆதார் கார்ட் தொலைந்துவிடும் பட்சத்தில், ஆதார் நம்பர் தெரியவில்லை என்றால் அதனை மீட்டெடுப்பது சிரமமான பணியாக இருந்தது.
தற்போது UIDAI பதிவு செய்த மொபைல் எண் மூலம் ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை மிகவும் எளிதாக்கியுள்ளது.இதற்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் ஆதார் எண்ணை கண்டறியும் வழிமுறை
- முதலில் uidai.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்.
- வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில், 'Aadhaar Services' கிளிக் செய்ய வேண்டும்.
- அப்போது, லாஸ்ட் யுஐடி / ஈஐடியைக் (Retrieve Lost UID/EID) என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக தோன்றும் திரையில் 'Select Option’ section இல் ‘Aadhaar No (UID)’ கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, அதில் கேட்கப்படும் முழு பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் போன்ற தகவலை பதிவிட வேண்டும்.
- கேப்ட்சாவை சரிபார்த்து SEND OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- தற்போது, மொபைல் எண்ணுக்கு வந்த 6 டிஜிட் ஓடிபி எண்ணை, திரையில் பதிவிட வேண்டும்.
அவ்வளவு தான், செல்போன் அல்லது இமெயிலுக்கு உங்களது ஆதார் எண் அனுப்பப்பட்டிருக்கும். அதனை உபயோகித்து, இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil