நாட்டில் முதன் முறையாக "இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் "சாப்டர்" கோவையில் துவக்கம். இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோயமுத்தூர் சாப்டர் இந்தியாவில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதிபதி முகம்மது ஜியாபுதீன் பாரதியார் பல்கலைகழக டீன் முனைவர் லவ்லினா லிட்டில் பிளவர - இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்டு டேக்ஸ் பிராக்சனர்ஸ் இந்தியா தலைவர் ஸ்ரீதர் பார்த்சாரதி - ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா - ஓய்வு பெற்ற அதிகாரி கோதண்டராம் ஐ.ஆர்.எஸ்.ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். சிறு, குறு தொழில்களில் வரி விதிப்புகள் குறித்து இந்திய பட்டய வரி பயி ற்சியாளர்கள் போதிய பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் - மேலும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்ப மாற்றங்களுக்கு தகுந்தபடி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பட்டய வரி பயி ற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான துவக்க விழா வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடைபெற்றது.கோயமுத்தூர் சாப்டர் தலைவர் சுப்ரமணியன் செயலாளர் நல்ல பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் துணை தலைவர் சுந்தர் ராஜன்,துணை செயலாளர் வேலுமணி,பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்,கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“