/indian-express-tamil/media/media_files/2025/05/29/WZpqJywVPjXEC2rr1iR6.jpg)
தற்போது எல்லோரது கரங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஆனால், இதனை திறம்பட நாம் உபயோகிக்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில செயலிகளை நம்முடைய போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இது குறித்த தகவல்கள் பாஸ்வாலா யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இப்பதிவில் காணலாம்.
அதன்படி, முதலாவதாக நம்முடைய போனில் இருக்க வேண்டியது ஆர்.பி.ஐ டைரக்ட் ஆப் (RBI Direct App). இந்த செயலி மூலமாக அரசு சார்பில் வழங்கப்படும் நிதி பத்திரங்கள் போன்றவற்றில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். இந்த செயலியை நேரடியாக ரிசர்வ் வங்கி செயல்படுத்துவதால் அபாயமும் கிடையாது. எனவே, அரசு சார்ந்த முதலீடுகளை நாடுபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அடுத்தபடியாக, எம்-பாரிவாஹன் (mParivahan) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நம்முடைய ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்.சி புக், காப்பீடு போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் இந்த செயலியில் பெற்றுக் கொள்ளலாம். எப்போதுமே, நம்மிடம் ஸ்மார்ட்போன் இருப்பதால், போக்குவரத்து காவலர்கள் நம்முடைய வாகனம் தொடர்பான ஆவணங்களை கேட்கும் போது இவற்றை காண்பிக்கலாம். இதன் மூலம் அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இதேபோல், டிஜிலாக்கர் (DigiLocker) செயலியும் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில், ஆதார், பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவை எப்போதும் ஸ்மார்ட்போனில் இருக்கும் போது, தேவைப்படும் இடங்களில் உபயோகப்படுத்தலாம். மேலும், இதற்காக கைகளில் எப்போதும் முக்கியமான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை.
மேலும், அடிக்கடி விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு டிஜியாத்ரா (DigiYatra) செயலி பயனுள்ளதாக இருக்கும். இன்றைய சூழலில் ரயில் நிலையங்களுக்கு இணையாக விமான நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்தி செக்யூரிட்டி செக்இன்-ஐ சுமார் 3 நிமிடங்களில் நாம் அடைய முடியும்.
இறுதியாக, Annual Information Statement (AIS) என்று அழைக்கப்படக் கூடிய செயலியும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி வருமான வரித்துறையின் கீழ் இயங்குகிறது. நம்முடைய அனைத்து நிதிநிலை அறிக்கைகளையும் இந்த செயலியை பயன்படுத்தி நாம் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, நமது ஊதியம், நாம் முதலீடு செய்துள்ள திட்டங்கள் போன்ற விவரங்கள் அனைத்தையும் இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் விவரங்கள் ஏதேனும் தவறாக இருந்தால், அது தொடர்பாக புகாரளித்து அவற்றை சீரமைக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.