ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2022ஆம் ஆண்டு வியத்தகு அளவில் அதிகரித்தன. இது எஃப்.டி. முதலீட்டாளர்களை குறிப்பாக மகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த உயர்வுகளுக்கு முன்பு வட்டி விகிதங்கள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுவிட்டன. இந்த நிலையில், மே 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான 10 மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2.5% அதிகப்படுத்தியதால் வங்கிகள் எஃப்.டி., விகிதங்களை உயர்த்தியுள்ளன.
இருப்பினும் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு நாணயக் கொள்கைக் குழுக் கூட்டங்களுக்கான ரெப்போ விகிதத்தில் தற்போதைய நிலையைப் பேணுகிறது.
இதனால், வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசி்ட விகித உயர்வை மெதுவாகக் கொண்டுள்ளன. பல வங்கிகள் விகித உயர்வை இடைநிறுத்தியுள்ளன.
மேலும் சில குறிப்பிட்ட காலப்பகுதிகளில் எஃப்.டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைக் குறைத்த 5 வங்கிகள் இங்கே உள்ளன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைத்துள்ளது.
அதேபோல், 16 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான எஃப்.டி காலத்திற்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் 7.20% லிருந்து 7.10% ஆக வங்கி குறைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி, 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, வழக்கமான குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 6.80% லிருந்து 6.75% ஆக வங்கி 5 bps குறைத்துள்ளது.
தற்போது, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 3.05% முதல் 7.25% வரை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்குகிறது. இந்தப் புதிய விகிதங்கள் ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒரு காலத்தில் 1% குறைத்து மற்றொரு காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது.
தற்போது, பேங்க் ஆஃப் இந்தியா 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 100 bps (1%) 7% லிருந்து 6% ஆக குறைத்துள்ளது.
இண்டஸ்இந்த் வங்கி
ஒரு ஆண்டு 7 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. அநத வகையில வங்கி 25 பிபிஎஸ் அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
கடந்த காலங்களில் 9.1 சதவீதம் வட்டி வழங்கிய வங்கி தற்போது 8.25 சதவீதம் ஆக குறைத்துள்ளது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, வங்கி பொது மக்களுக்கு 4.00 சதவீதம் முதல் 8.60 சதவீதம் வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரையிலும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“