முதல் முறையாக தனிநபர் கடன் வாங்க போறீங்களா? அப்போ இந்த 5 தவறுகளை பண்ணாதீங்க

தனிநபர் கடனை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். பயணம் செய்தல், ஆடம்பர பொருட்களை வாங்குதல் அல்லது நண்பருக்கு கடன் கொடுத்தல் போன்ற தவிர்க்கக் கூடிய காரணங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

தனிநபர் கடனை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். பயணம் செய்தல், ஆடம்பர பொருட்களை வாங்குதல் அல்லது நண்பருக்கு கடன் கொடுத்தல் போன்ற தவிர்க்கக் கூடிய காரணங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Personal loan

ஏதேனும் ஒரு காரணத்திற்காக உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், தனிநபர் கடன் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் ஆராயலாம். திடீர் செலவு, திருமணம் நடத்துவது, உங்கள் குழந்தையை உயர்கல்விக்கு அனுப்புவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கடன் தேவைப்படலாம். அதே சமயம், நீங்கள் முதல்முறையாக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அதை நன்கு திட்டமிட்டு தவறுகளைத் தவிர்ப்பது அவசியம்.

Advertisment

இதற்காக, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். அதன்படி, முதல்முறை கடன் வாங்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் குறித்து பார்க்கலாம்.

கடன் வழங்குபவரின் தரம்: முதலாவதாக, கடன் வழங்குபவர் ஒரு புகழ்பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். எங்கோ திடீரென தொடங்கிய நிறுவனமாக இருக்கக் கூடாது. பொதுவாக, வங்கிகளில் கடன் பெற முடியாத வாடிக்கையாளர்களை சிறிய நிறுவனங்கள் குறிவைக்கின்றன. எனவே, கடன் வாங்கும் முன் கடன் வழங்குபவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிக வட்டி விகிதங்கள்: தனிநபர் கடன்கள் மிக அதிக வட்டி விகிதங்களை கொண்டுள்ளன. எனவே, உங்களால் செலுத்த முடியாத வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 

Advertisment
Advertisements

மறைமுக கட்டணங்கள்: சில கடன் வழங்குநர்கள் மறைமுக கட்டணங்களை விதிக்கின்றனர். கடன் பெறுபவர்கள் இவற்றிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் செயலாக்க கட்டணங்கள் (processing charges), கடன் காப்பீடு மற்றும் பிற கட்டணங்கள் அடங்கும். செயலாக்க கட்டணங்கள் கட்டாயமானவை என்றாலும், அவை கடன் வழங்குநருக்கு ஏற்ப மாறுபடும். கடன் காப்பீடு என்பது விருப்பமானது; உங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே அதை வாங்க வேண்டும்.

பல்வேறு கடன் வகைகளை ஒப்பிடாமல் இருப்பது: சீக்கிரம் கடனை பெற வேண்டும் என்ற அவசரத்தில், சில கடன் வாங்குபவர்கள் பல்வேறு வகைகளை ஒப்பிட்டுப் பார்க்காமலேயே முடிவெடுத்துவிடுகிறார்கள். எனவே, எந்தக் கடனை தேர்வு செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் பல தகவல்களை ஆராய வேண்டும். 

அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகக் கடன் வாங்குவது: கடைசியாக, தனிநபர் கடனை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். பயணம் செய்தல், ஆடம்பர பொருட்களை வாங்குதல் அல்லது நண்பருக்கு கடன் கொடுத்தல் போன்ற தவிர்க்கக் கூடிய காரணங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: