திடீர் பயணம் முதல் அவசர நிதி தேவை வரை... ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் பெர்சனல் லோன்

வீடு கட்டுமான பணிகளின் போது, வீட்டுக் கடன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், தனி நபர் கடனை பரிசீலிக்கலாம். அந்த சூழலில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

வீடு கட்டுமான பணிகளின் போது, வீட்டுக் கடன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், தனி நபர் கடனை பரிசீலிக்கலாம். அந்த சூழலில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Personal loan

இன்றைய காலகட்டத்தில் தனிநபர் கடன் பெறுவது முன்பு போல் கடினமான காரியமல்ல. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் ஃபின்டெக் தளங்கள் என பல வழிகளில் தனிநபர் கடன்களை எளிதாக பெறலாம். ஆனால், தனிநபர் கடன்கள் அதிக வட்டி விகிதத்தை கொண்டிருப்பதால், கடன் வாங்குவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Advertisment

திடீரென்று அவசர நிதி தேவை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். அத்தகைய சூழல்களில் தனிநபர் கடன் உதவியாக இருக்கும். அதன்படி, குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் தனிநபர் கடன்களை பரிசீலிப்பதன் மூலம் தேவையற்ற சிக்கல்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

தனிநபர் கடன் பெறுவதற்கான 5 முக்கிய காரணங்கள்:

1. அவசரகால தேவைகள்: தனிநபர் கடன் பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தனிப்பட்ட அவசர தேவைகள். குடும்பத்தில் ஒருவர் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்படும் போதோ அல்லது நீண்ட கால நண்பருக்கு நிதி உதவி தேவைப்படும் போதோ இது போன்ற அவசரங்கள் ஏற்படலாம். அந்த சமயத்தில், தனிநபர் கடன் கைகொடுக்கும்.

Advertisment
Advertisements

2. வீடு கட்டுமான பணிகள்: வீடு கட்டுமான பணிகளின் போது, வீட்டுக் கடன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், தனி நபர் கடனை பரிசீலிக்கலாம். அந்த சூழலில் இது உதவியாக இருக்கும்.

3. திருமணம் அல்லது முக்கிய நிகழ்வுகள்: திருமணம் அல்லது பிற சுப காரியங்களுக்காகவும் தனிநபர் கடன் வாங்கலாம். முக்கியமான நிகழ்வுகளையும், திருமணங்களையும் தள்ளிப்போட முடியாது என்பதால், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவது தவறில்லை. சில சமயங்களில், மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் அளவுக்கு அதிகமாக செலவளித்துவிடுகிறார்கள். கடன் வாங்கிய பணத்தை செலவளிக்கும் போது, அளவுக்கு அதிகமாக செலவளிப்பதை தவிர்ப்பது அவசியம்.

4. திடீர் பயணம்: பொழுதுபோக்கு அல்லது விடுமுறை பயணங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றாலும், எதிர்பாராத மற்றும் அவசரமான பயணங்களுக்கு பணம் பற்றாக்குறையாக இருக்கும்போது தனிநபர் கடன் எடுப்பது தவறில்லை.

5. உயர்கல்வி: உயர்கல்விக்கு பொதுவாக கல்விக் கடனை நாடலாம். ஆனால், கல்விக் கடன் போதுமானதாக இல்லாவிட்டால், மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய தனிநபர் கடன் வாங்குவதில் தவறில்லை. இது உங்கள் கல்வி கனவுகளைத் தொடர உதவும்.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: