சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்த குமார், சொந்த வீடு வாங்க முடிவு செய்தார். அவர் முன்பணமாக சிறிய தொகையை ஏற்பாடு செய்தார்.
மீதியை வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதன்படி வங்கியில் ஹோம் லோனுக்கு விண்ணப்பித்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவருக்கு ஹோம்லோன் நிராகரிக்கப்பட்டது.
பொதுவாக ஹோம் லோன்கள் ஏன் நிராகரிக்கப்படுகின்றன. 5 முக்கிய காரணங்களை பார்க்கலாம்.
- தற்காலிக வேலை
உங்கள் வருமானம் உங்கள் வேலையைச் சார்ந்தது. 10-15 வருடங்கள் வீட்டுக் கடனை எந்தவித சிரமமும் இல்லாமல் திருப்பிச் செலுத்த உங்கள் வருமான ஆதாரம் நிலையானதாக இருக்க வேண்டும்.
எனவே கடன் வழங்குபவர்கள் உங்கள் வேலைவாய்ப்பை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர், எனவே நீங்கள் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தாலும், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் வழங்குபவர்கள் உங்கள் வேலையின் காலம் மற்றும் உங்கள் முதலாளியின் நம்பகத்தன்மை ஆகியவற்றைச் சரிபார்ப்பார்.
2) கடன் பிரச்னைகள்- சிபில் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர் உங்கள் நிதி ஆரோக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது. நபர் தனது கடனை சரியான நேரத்தில் செலுத்துகிறாரா இல்லையா என்பதை இது குறிக்கிறது.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் - 600 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் - நீங்கள் வீட்டுக் கடன் பெறுவது கடினமாக இருக்கலாம். 700 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் நல்லதாகக் கருதப்படும்,
மேலும், நீங்கள் EMI செலுத்துவதில் அதிக தாமதங்கள் இருந்தால், நிராகரிப்பு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
3) சரியான பில்டர் தேவை
சொத்து வாங்க பல விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பில்டர் நிதி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாவிட்டால், எவ்வளவு பிரீமியம் திட்டமாக இருந்தாலும், வீட்டுக் கடன் பெறுவது சவாலானதாக இருக்கும்.
4) சொத்து அங்கீகாரம்
சொத்து அங்கீகரிக்கப்படாவிட்டால், நீங்கள் வீட்டுக் கடன் பெற வாய்ப்பில்லை, நீங்கள் அதைப் பெற்றாலும், வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும்.
இதைத் தவிர்க்க, நீங்கள் வாங்கும் சொத்தின் அங்கீகாரத்தைப் பார்ப்பது நல்லது.
5) சொத்து மதிப்பீட்டில் சிக்கல்கள்
வங்கியில் இருந்து தேவையான நிதியைப் பெறுவதில் சொத்தின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஒரு மறுவிற்பனைச் சொத்தை வாங்குகிறீர்கள் அல்லது சொத்தின் மதிப்பீடு குறைவாக இருந்தால் உங்கள் வீட்டுக் கடன் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/