Advertisment

குறைந்த வட்டியில் பர்சனல் லோன்... உபயோகமான 5 டிப்ஸ்!

பர்சனல் லோனில் குறைந்த வட்டியில் நல்ல தொகையை பெற முக்கியமான 5 காரணிகளை இச்செய்திதொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
குறைந்த வட்டியில் பர்சனல் லோன்... உபயோகமான 5 டிப்ஸ்!

இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன்  என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.பண நெருக்கடியில் பலரும் வங்கியில் தனிநபர் கடனை நாடி செல்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடன்கள் சிறந்த சாய்ஸாக கருதப்படுகிறது. 

Advertisment

செக்யூரிட்டியை விட கடன் தொகை அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் தனிநபர் கடன்களில் மட்டுமே உண்டு. தனிநபர் கடன்களை மலிவான வட்டி விகிதங்களில் பெறுவது முக்கியமாகும். வட்டி மற்றும் கட்டணங்கள் வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடலாம். அந்த வகையில், பர்சனல் லோனில் குறைந்த வட்டியில் நல்ல தொகையை பெற முக்கியமான 5 காரணிகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.



1. கிரெடிட் ஸ்கோர்

உங்களின் கிரெடிட் ஸ்கோர் 700க்கும் மேல் இருக்கும் பட்சத்தில், குறைந்த வட்டியில் உங்களுக்கு பர்சனல் லோன் கிடைத்திடும். இந்த ஸ்கோரை முந்தைய கால வங்கியுடனான பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம். கிரெட்டி ஸ்கோர் நன்றாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் பணத்தைச் செலுத்திவிடுவீர்கள் என்ற நம்பிக்கை வங்கிக்கு ஏற்படும். எனவே, சரியான நேரத்தில் கிரெடிட் கார்ட் பில் செலுத்துவது, பழைய லோன்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் அடைத்தது ஆகியவை மூலம் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியும்.



2. கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துதல்

பர்சனல் லோன் வழங்குவதில் கிரெட்டி ஸ்கோருடன், பழைய லோன்களை சரியான நேரத்தில் அடைத்துள்ளீர்கள் என்பதையும் ஆய்வு செய்த பிறகே வட்டி விகிதத்தை முடிவு செய்வார்கள். கடனை காலம் தாழ்த்தி கட்டுபவர்களுக்கும் லோன் வழங்கப்படும். ஆனால், வட்டி விகிதம் அதிகளவில் இருக்கும். எனவே, தனிநபர் கடனை குறைந்த வட்டி விகிதத்தில் பெற, பழைய கடனை சரியான நேரத்தில் செலுத்த முயற்சி செய்யுங்கள்.



3. தொழில்முறை சான்றிதழ்களை பயன்படுத்துங்கள்

உங்களின் பணியிட சான்றிதழைப் பொறுத்துத் தான், பர்சனல் லோன் தொகை முடிவு செய்யப்படும். உங்களின் வருமானம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிகளவில் கடன் தர வங்கி முன்வரும். அத்தகைய சமயத்தில், சிறந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு, வருமான வரி சான்றிதழை வங்கியில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதே போல, நீங்கள் பணியாற்றும் நிறுவனம் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக இருக்கும் பட்சத்தில், லோன் சரியான நேரத்தில் செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். எனவே, குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வழங்க முன்வருவார்கள்



4. வங்கியுடன் நல்லுறவு

உங்களது வங்கிக்கு நீங்கள் நிலையான வாடிக்கையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளில் அவ்வப்போது பணம் செலுத்துவது, பணம் எடுப்பது போன்ற செயல்கள் மூலம் வங்கியுடன் நல்லுறவு வைத்திருக்கும் பட்சத்தில், சிறப்பான வட்டி விகிதத்தில் லோன் கிடைத்திடலாம்.

5. வங்கிகளின் வட்டி விகிதங்களைக் கணக்கிடுங்கள்

முதலில், கடன் வழங்கும் வங்கிகளில் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அதில், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கியைத் தேர்வு செய்யுங்கள். 

ஆன்லைனில் வங்கி லோன் பிராசஸ் நடைபெறும் பட்சத்தில், வீட்டில் இருந்தபடியே லோனை பெற்று மகிழுங்கள்

குறிப்பு: வங்கியின் இணையதளத்தில் தனிநபர் கடனுக்கான கால்குலேட்டரைப் பயன்படுத்தி நீங்கள் வாங்க விரும்பும் கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் இஎம்ஐ கணக்கிட மறவாதீர்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment