ஆன்லைன் கடன் மோசடி; லோன் ஆப்கள் விரிக்கும் வலை: பொதுமக்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள் இதோ

போலியான கடன் செயலிகள் பெரும்பாலும் சரியான அலுவலக முகவரி, வாடிக்கையாளர் தொடர்பு எண்கள் அல்லது வாடிக்கையாளர் குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்குவதில்லை.

போலியான கடன் செயலிகள் பெரும்பாலும் சரியான அலுவலக முகவரி, வாடிக்கையாளர் தொடர்பு எண்கள் அல்லது வாடிக்கையாளர் குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்குவதில்லை.

author-image
WebDesk
New Update
Loan app

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால், அவசர தேவைகளுக்காகவும், அன்றாட செலவுகளுக்காகவும் தனிநபர் கடன் செயலிகளை நாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வசதியை பயன்படுத்தும் முன் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். போலியான தனிநபர் கடன் செயலிகள் சந்தையில் பெருகிவிட்டன. இத்தகைய போலியான செயலிகளை அடையாளம் கண்டு தவிர்ப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில குறிப்புகளை காணலாம்.

Advertisment

1. ரிசர்வ் வங்கி அங்கீகாரம் இல்லாத செயலிகள்:

போலியான தனிநபர் கடன் செயலிகளின் பொதுவான குறைபாடு என்னவென்றால், அவற்றுக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இருக்காது. மேலும், அவை ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வங்கிசாரா நிதி நிறுவனத்துடனோ (NBFC) அல்லது வங்கி நிறுவனத்துடனோ இணைக்கப்பட்டிருக்காது. கடன் வாங்குபவர்களுக்கு உதவும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி தொடர்ந்து புதுப்பித்து வெளியிட்டு வருகிறது. எனவே, நீங்கள் கடன் வாங்க விரும்பும் செயலி இந்த பட்டியலில் இல்லை என்றால், அதை உடனடியாக தவிர்ப்பது நல்லது.

2. அதிகப்படியான அனுமதிகளும், தனியுரிமை அச்சுறுத்தல்களும்:

Advertisment
Advertisements

மோசடி செய்பவர்களின் செயலிகள் பெரும்பாலும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளான தொடர்புகள், புகைப்படங்கள், அழைப்பு பதிவுகள், எஸ்.எம்.எஸ் விவரங்கள் போன்றவற்றை அணுக தேவையற்ற அனுமதிகளை கேட்கும். இந்த அனுமதிகள் வழங்கப்பட்டால், பின்னர் கடன் வாங்குபவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் துன்புறுத்த இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும். நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான தனிநபர் கடன் செயலிகள், கடன் விண்ணப்பத்தை செயல்படுத்த தேவையான தரவுகளை மட்டுமே கோரும். மேலும், அவை தனியுரிமை கொள்கைகளை பராமரிக்கும்.

3. நம்ப முடியாத கடன் வாக்குறுதிகள்:

பல போலியான கடன் செயலிகள் நம்ப முடியாத விளம்பரங்களை உருவாக்குகின்றன. "பூஜ்ஜிய வட்டி", "ஆவணங்கள் தேவையில்லை", "கிரெடிட் ஸ்கோர் சரிபார்ப்பு இல்லை" அல்லது "மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் எளிதான திருப்பி செலுத்தும் நிபந்தனைகளுடன் உடனடி கடன்" போன்ற வாக்குறுதிகளை அவை அளிக்கும். இத்தகைய செயலிகள் பெரும்பாலும் மோசடியே ஆகும். உண்மையான கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒருபோதும் இது போன்ற யதார்த்தமற்ற வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

4. தெளிவான தகவல் தொடர்பு இல்லாமை:

போலியான கடன் செயலிகள் பெரும்பாலும் சரியான அலுவலக முகவரி, வாடிக்கையாளர் தொடர்பு எண்கள் அல்லது வாடிக்கையாளர் குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்குவதில்லை. இவை அனைத்தும் முக்கிய அபாயகரமான அறிகுறிகளாகும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கடன் வழங்குபவர்களும் இத்தகைய தகவல்களை தெளிவாக வெளியிட வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு சரியான வாடிக்கையாளர் ஆதரவையும், குறைதீர்க்கும் வழிமுறைகளையும் வழங்க வேண்டும்.

5. அச்சுறுத்தும் மற்றும் தவறான வசூல் நடைமுறைகள்:

இத்தகைய போலியான கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தும் வசூல் அழைப்புகள், ஆபாசமான செய்திகள் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக புகார் செய்கின்றனர். சில சமயங்களில் கடன் வாங்காமல் கூட இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவை. இது போன்ற செயலிகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

Online Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: