Senior Citizen Fixed Deposit Calculation: ஏறக்குறைய அனைத்து வங்கிகளும் கடந்த சில மாதங்களில் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.
மூத்த குடிமக்கள் தற்போது 9% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தை பெறலாம். இருப்பினும் முதலீட்டாளர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
RBI இன் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனின் படி ரூ.5 லட்சத்துக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படும்.
இந்நிலையில், சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை சமீபத்தில் 9.6% ஆக உயர்த்தியது.
இதில் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளில் ரூ.4.82 லட்சத்தைப் பெறலாம். ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வைப்புத்தொகைக் காப்பீட்டு வரம்புக்குக் குறைவாக இருப்பதால், உத்தரவாதம் அளிக்கப்படும்.
ரூ.50,000 வைப்புக்கு 9.6% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.80,347 ஆக கிடைக்கும்.
ரூ.1 லட்சம் டெபாசிட்டுக்கு 9.6% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.1.6 லட்சம் கிடைக்கும்.
ரூ.2 லட்சம் டெபாசிட்டுக்கு 9.6% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.3.2 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.
ரூ.4 லட்சம் டெபாசிட்டுக்கு 9.6% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.6.42 லட்சம் கிடைக்கும்.
ரூ.5 லட்சம் டெபாசிட்டுக்கு 9.6% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“