வங்கி நிலையான வைப்புக்கள் இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க மற்றும் பிரபலமான வைப்புத் திட்டங்களில் ஒன்றாகும். வங்கிகள் தற்போது 1 முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு 5.50 முதல் 6.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றனர்.
நிலையான வைப்புகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களைத் தவிர, இந்த வைப்புத் திட்டத்தின் பிரபலத்திற்கு, முதலீட்டின் பாதுகாப்பான தன்மை ஒரு முக்கிய காரணமாகும். உதாரணமாக, ஒருவர் ஒரு ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்யும்போது, அசல் தொகை ஒரு நிலையான வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது மற்றும் வைப்புத்தொகையின் வட்டி ஆதாயம் காலப்போக்கில் வளர்கிறது.
ஃபிக்ஸ்ட் டெபாசிட்களும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பரந்த அளவிலான முதிர்வு காலங்களை வழங்குகின்றன. வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில், முன்கூட்டியே திரும்பப் பெறுவது பொதுவாக அனுமதிக்கப்படாது அல்லது அபராதத்துடன் திரும்பப் பெறலாம் போன்ற சில வரம்புகள் உண்டு. கூடுதல் நிதிகளை மீண்டும் முதலீடு செய்வது பொதுவாக குறைந்த வட்டி விகிதத்தில் இருக்கும் (விகிதங்கள் குறைந்து வரும் போக்கில் இருந்தால்).
எனவே, சந்தையில் கிடைக்கும் மற்ற ஃபிக்ஸ்ட் டெபாசிட்க்களை ஒப்பிடும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில காரணிகள் உள்ளன.
1. வங்கியின் நம்பகத்தன்மை: டி.ஐ.சி.ஜி.சி மூலம் வைப்புத்தொகை காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஃபிக்ஸ்ட் டெபாசிட்க்கள் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் இதன் கீழ் ரூ .5 லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது. மேலும், எல்லா பணத்தையும் ஒரு ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் வைப்பதற்கு பதிலாக, முதலீட்டாளர்கள் தங்கள் சார்புநிலையை குறைக்க முதலீட்டு தொகையை வெவ்வேறு வங்கிகளில் பகிர்ந்து டெபாசிட் செய்யலாம் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, ஒரு சிறந்த யோசனையைப் பெற, ஒரு வங்கியின் கடன் மதிப்பீட்டையும் ஒருவர் கவனத்தில் கொள்ளலாம்.
2. வட்டி: டெபாசிட் கால அளவின் அடிப்படையில், வட்டி விகிதங்கள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன. இது வைப்பாளரின் வயதையும் பொறுத்தது. மொத்த அல்லது பெரிய வைப்புத்தொகை அதிக வட்டி விகிதத்தை ஈர்க்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பெரும்பாலான வங்கிகள் வழங்கும் வழக்கமான விகிதங்களை விட 0.5 சதவீதம் அதிகம். முதலீட்டின் முழு காலத்திற்கும், ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதம் அப்படியே உள்ளது.
3. ஒட்டுமொத்த வட்டி மற்றும் மாத வட்டி: ஒரு ஒட்டுமொத்த ஃபிக்ஸ்ட் டெபாசிட் மூலம், ஒருவர் சம்பாதித்த வட்டியை ஒரு வழக்கமான இடைவெளியில் மீண்டும் முதலீடு செய்யலாம், இதில் கூட்டு நன்மைகள் மற்றும் திரட்டப்பட்ட வட்டி முதிர்ச்சியில் அல்லது டெபாசிட் காலத்தின் முடிவில் பெறப்படுகிறது. மறுபுறம், வட்டி ஒரு வழக்கமான இடைவெளியில், மாதாந்திர அல்லது ஆண்டுதோறும் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வழக்கமாக, ஒரு ஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதம் காலாண்டுடன் இணைக்கப்பட்டு அசலுடன் மறு முதலீடு செய்யப்படுகிறது. அதேசமயம் மாதாந்திர வட்டியுடைய ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் ஓய்வுபெற்ற முதலீட்டாளர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் தங்கள் அன்றாட செலவுகளைச் சந்திக்க மாதந்தோறும் வட்டி வருமானத்தை வழங்கும்.
4. கடன்: நிலையான வைப்புகள், முதலீட்டாளர்களுக்கு கடன் வசதியை வழங்குகிறது, இது இந்த வைப்புத் திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும். எந்தவொரு நிதி அவசர காலத்திலும், ஒருவர் தனது சொந்த வைப்புத்தொகையில் 90 சதவீதம் வரை, ஃபிக்ஸ்ட் டெபாசிட்க்களுக்கு எதிராக கடன்களைப் பெற முடியும். கடனின் காலம் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தின் அதிகபட்ச முதிர்வுக்காலம் வரை இருக்கலாம், ஏனெனில் கடனின் அதிகபட்ச முதிர்வுக்காலம் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டின் அதிகபட்ச முதிர்வுக்காலம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.
ஃபிக்ஸ்ட் டெபாசிட்க்கு எதிரான இந்த கடன்களில், வங்கிகள் வழக்கமாக பொருந்தக்கூடிய ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதத்தை விட 0.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை கூடுதல் வட்டி வசூலிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. முன்கூட்டியே திரும்பப் பெறுதல்: முதலீட்டாளர்கள் தங்கள் ஃபிக்ஸ்ட் டெபாசிட் முதலீட்டை முதிர்வுக்காலம் முடிவதற்குள் திரும்பப் பெற அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபதாரம் வங்கியில் இருந்து வங்கிக்கு மாறுபடும். பொதுவாக பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை வங்கிகளால் 0.5 சதவீதமாக 1 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு அபராதம் இல்லாமல் முன்கூட்டியே தங்கள் ஃபிக்ஸ்ட் டெபாசிட்க்களை உடைக்க அனுமதித்தாலும், கூடுதல் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, ஒரு நிலையான வைப்புக்கு ஒரு வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது, முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு குறைந்த அபராதம் விதிக்கும் வங்கிகளைத் தேட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.