நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபம்.. எஸ்பிஐ-யில் இருக்கு மிகச் சிறந்த திட்டம்!

8.5 முதல் 9.5 சதவீதம் வரையிலான வட்டி விகித லாபத்தையும் பெறலாம்.

ITR Filing Last Date
ITR Filing Last Date

fixed deposit in sbi: பாதுகாப்பான மற்றும் தேவைப்படும் போது பணத்தை உடனே திரும்பப்பெறக் கூடிய எளிமையான சேமிப்புத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது, வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்டம்.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைத்தாலும், மறுபக்கம் அதிக வட்டிக்கும் சேர்த்து ஆசைப்படுவார்கள். அதிக வட்டி லாபம் அளிக்கக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும் என்றால் ரிஸ்க் இல்லாமல் இருக்காது.

ஸ்மால் ஃபினான்ஸ் வங்கிகள் சாதாரண வங்கிகளை விட கூடுதலான லாபத்தை அளிக்கும். பொதுவாக, வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டும் கொடுக்கும் நிலையில், ஸ்மால் ஃபினான்ஸ் வங்கிகள் 9 சதவீத வட்டி விகிதம் வரை லாபம் அளிக்கின்றன.

ஜனா ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி 3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 9 சதவீத வட்டி விகித லாபத்தையும், மூத்த குடிமக்கள் என்றால் கூடுதலாக 0.60 சதவீத வட்டி விகித லாபத்தையும் வழங்குகிறது.

இதேபோன்று ஈக்விட்டாஸ், பந்தன் உள்ளிட்ட ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி நிறுவனங்களும், வணிக வங்கிகளைவிட கூடுதல் லாபம் அளிக்கும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

மறுபக்கம் இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே வழங்குகிறது.

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 8% மேல் வட்டி தரும் ஒரே தனியார் வங்கி இதுதான்!

ஸ்மால் ஃபினான்ஸ் வங்கிகள் புதிதாகத் தொடங்கப்பட்டவை. அதிக வட்டி விகித லாபத்திற்காக மட்டும் முதலீட்டாளர்கள் ஆசைப்படக்கூடாது. முதலீடு செய்த பணத்திற்கான பாதுகாப்பான சேவையை இந்த வங்கிகளால் தொடர்ந்து வழங்க முடியுமா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களைவிட அதிக பாதுகாப்பாகவும், இணையான 8.5 முதல் 9.5 சதவீதம் வரையிலான வட்டி விகித லாபத்தையும் பெறலாம்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fixed deposit in sbi details

Next Story
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 8% மேல் வட்டி தரும் ஒரே தனியார் வங்கி இதுதான்!sbi new deposit scheme
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com