பல்வேறு வங்கிகள் கடந்த சில மாதங்களில் பொது மற்றும் மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்பவர்களுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.
எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் யூனிட்டி வங்கி ஆகியவை வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.
அதன்படி மிக மூத்த மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கிகள் வழங்கும் மிக உயர்ந்த விகிதங்களைப் பாருங்கள்.
ஹெச்டிஎஃப்சி
HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 21 பிப்ரவரி 2023 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் (80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் உட்பட) இந்த வட்டி விகிதத்தைப் பெறலாம். என்ஆர்ஐகளுக்கு மூத்த குடிமக்கள் விகிதங்கள் பொருந்தாது என்று வங்கி கூறுகிறது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 35 மாத கால வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு, யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 25 மாதங்கள் மற்றும் 35 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 8% வட்டியை வழங்குகிறது.
இந்த விகிதங்கள் பிப்ரவரி 23, 2023 முதல் பொருந்தும். 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் (80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் உட்பட) யெஸ் வங்கியின் திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்களைப் பெறலாம். மூத்த குடிமக்கள் விகிதங்கள் உள்நாட்டு வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
PNB மூத்த குடிமக்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மிக (சூப்பர்) மூத்த குடிமக்களுக்கு, PNB 22 பிப்ரவரி 2023 முதல் 666 நாட்கள் வைப்புத்தொகைக்கு 8.05% வட்டியை வழங்குகிறது.
யூனிட்டி வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 1001 நாட்கள் வைப்புத்தொகைக்கு 9.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
181-201 நாட்கள் மற்றும் 501 நாட்கள் டெபாசிட்களுக்கு, யூனிட்டி வங்கி 9.25% வட்டியை மூத்த குடிமக்களுக்கு பிப்ரவரி 15, 2023 முதல் வழங்குகிறது.
யூனிட்டி வங்கியின் திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்களை 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் (80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் உட்பட) பெறலாம்.
எஸ்.பி.ஐ வங்கி
எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
400 நாட்கள் சிறப்பு அமிர்த கலாஷ் வைப்புத்தொகையின் கீழ், எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி விகிதத்தை 15 பிப்ரவரி 2023 முதல் 31 மார்ச் 2023 வரை வழங்குகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் (80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உட்பட) SBI இன் திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்களைப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/