வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் (Fixed Deposits) நாட்டில் மிகவும் பிரபலமான, நம்பகமான சேமிப்பு முறையாகும். வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்யப்படும் பணத்தின் மீதான ஆபத்து மிகவும் குறைவு மற்றும் வருமானம் நிலையானது. கூடுதலாக அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் சமீபகாலமாக ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
பெரிய அரசு மற்றும் தனியார் துறை வங்கிகளான எஸ்.பி.ஐ (SBI), எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கி ஆகியவை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு 3% முதல் 7.35% ஆண்டு வட்டியை வழங்குகின்றன. இப்போது நீங்கள் இந்த வங்கிகளின் ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க விரும்பினால், எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் உங்கள் பணம் எங்கு வேகமாக இரட்டிப்பாகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 10 வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 6.50 சதவீத வட்டியை வழங்குகிறது. ஃபிக்ஸ்ட் டெபாசிட் கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் ரூ.19,05,559 கிடைக்கும். இதில் வட்டி வருமானம் ரூ.9,05,559. அதாவது, உங்கள் மொத்த முதலீடு இருமடங்கிற்கு சற்று குறைவாக இருக்கும். 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு ஜூன் 15, 2024 முதல் மேற்கண்ட வட்டி விகிதங்கள் பொருந்தும்.
ஐ.சி.ஐ.சி.ஐ
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 10 வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 6.90 சதவீத வட்டியை வழங்குகிறது. ஃபிக்ஸ்ட் டெபாசிட் கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் ரூ.19,82,020 கிடைக்கும். இதில் வட்டி வருமானம் ரூ.9,82,020. அதாவது, உங்கள் மொத்த முதலீடு இருமடங்கை விட சற்று குறைவாக இருக்கும். 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு ஆகஸ்ட் 26, 2024 முதல் மேற்கண்ட வட்டி விகிதங்கள் பொருந்தும்.
எச்.டி.எஃப்.சி
எச்.டி.எஃப்.சி வங்கி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 10 வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 7 சதவீத வட்டியை வழங்குகிறது. ஃபிக்ஸ்ட் டெபாசிட் கால்குலேட்டர் படி, நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் ரூ.20,01,597 கிடைக்கும். இதில் வட்டி வருமானம் ரூ.10,01,597. அதாவது, உங்கள் மொத்த முதலீடு இருமடங்கிற்கு சற்று அதிகமாக உள்ளது. 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு ஜூலை 24, 2024 முதல் மேற்கண்ட வட்டி விகிதங்கள் பொருந்தும்.