பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட ஸ்மால் வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் பொதுவாக சாதாரண மக்களை விட மூத்த குடிமக்கள், மிக மூத்தக் குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வட்டி அதிகமாக கிடைக்கும்.
இதற்கிடையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை காட்டிலும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஸ்மால் வங்கிகள் அதிகளவு ரிட்டனை கொடுக்கின்றன. எனினும் ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ள முதலீடுகளுக்கு காப்பீடு கிடையாது என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பொதுப் பிரிவினருக்கு 3.5 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 13 மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.1 சதவீதம் வழங்குகிறது. இந்தப் புதிய விகிதம் கடந்த மே மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஐசிஐசிஐ வங்கி 3 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
15 முதல் 18 மாதங்கள் மற்றும் 18 முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. 4 ஆண்டுகள் மற்றும் 7 மாத கால அளவு 7.25 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இது மே 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“