எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை நிரந்தர வைப்பு கணக்கை (fixed deposit account) திறக்கும் தேர்வை வழங்குகின்றன. இரண்டு கோடிக்கும் கீழ் உள்ள வைப்புகளுக்கு இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் 6 சதவிகிதம் முதல் 6.9 சதவிகிதத்துக்கு இடையில் இருக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒரு ஆண்டுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்
இரண்டு கோடிக்கும் குறைவான அல்லது அதற்கு நிகரான தொகைக்கான நிரந்தர வைப்பு’ களுக்கு எஸ்பிஐ 6 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்.
அதே அளவிலான தொகைக்கு ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முறையே 6.3 சதவிகிதம் ( மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம் ) மற்றும் 6.2 ( மூத்த குடிமக்களுக்கு 6.7 சதவிகிதம்) சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 6.19 சதவிகிதம் வட்டி வழங்குகிறது பெரியவர்களுக்கு 6.55 சதவிகிதம்.
2-3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்
ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 6.4 சதவிகிதம் என்ற ஒரே அளவிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கிகள் 2-3 வருடங்களுக்கான நிரந்தர வைப்பு தொகைகளுக்கு 6.9 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 6.38 சதவிகிதமும் எஸ்பிஐ 6 சதவிகிதமும் வட்டி வழங்குகின்றன.
3-5 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்
எஸ்பிஐ: 6 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
ஹெச்டிஎப்சி : 6.3 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம்)
ஐசிஐசிஐ : 6.4 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதம்)
பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.5 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
5-10 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்
எஸ்பிஐ: 6 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
ஹெச்டிஎப்சி: 6.3 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம்)
ஐசிஐசிஐ: 6.4 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதம்)
பஞ்சாப் நேஷனல் வங்கி: 7 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.