scorecardresearch

பிக்சட் டெபாசிட் துவக்க திட்டமா? – இதோ முன்னணி வங்கிகளின் ஒப்பீடுகள்

Fixed deposit : இரண்டு கோடிக்கும் குறைவான அல்லது அதற்கு நிகரான தொகைக்கான நிரந்தர வைப்பு’ களுக்கு எஸ்பிஐ 6 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்.

fixed deposit interest rates, sbi, hdfc bank, icici bank, punjab national bank, fd rates compared
Axis Bank Tamil Nadu News, Axis Bank News In Tamil, Axis Bank Latest Tamil News, Axis Bank Chennai News, ஆக்சிஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி கடன், ஆக்சிஸ் வங்கி கடன் தவணை

எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை நிரந்தர வைப்பு கணக்கை (fixed deposit account) திறக்கும் தேர்வை வழங்குகின்றன. இரண்டு கோடிக்கும் கீழ் உள்ள வைப்புகளுக்கு இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் 6 சதவிகிதம் முதல் 6.9 சதவிகிதத்துக்கு இடையில் இருக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஒரு ஆண்டுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்

இரண்டு கோடிக்கும் குறைவான அல்லது அதற்கு நிகரான தொகைக்கான நிரந்தர வைப்பு’ களுக்கு எஸ்பிஐ 6 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்.
அதே அளவிலான தொகைக்கு ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முறையே 6.3 சதவிகிதம் ( மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம் ) மற்றும் 6.2 ( மூத்த குடிமக்களுக்கு 6.7 சதவிகிதம்) சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 6.19 சதவிகிதம் வட்டி வழங்குகிறது பெரியவர்களுக்கு 6.55 சதவிகிதம்.

2-3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்

ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 6.4 சதவிகிதம் என்ற ஒரே அளவிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கிகள் 2-3 வருடங்களுக்கான நிரந்தர வைப்பு தொகைகளுக்கு 6.9 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 6.38 சதவிகிதமும் எஸ்பிஐ 6 சதவிகிதமும் வட்டி வழங்குகின்றன.

3-5 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்

எஸ்பிஐ: 6 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
ஹெச்டிஎப்சி : 6.3 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம்)
ஐசிஐசிஐ : 6.4 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதம்)
பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.5 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)

5-10 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதம்

எஸ்பிஐ: 6 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)
ஹெச்டிஎப்சி: 6.3 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.8 சதவிகிதம்)
ஐசிஐசிஐ: 6.4 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதம்)
பஞ்சாப் நேஷனல் வங்கி: 7 சதவிகிதம் (மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகிதம்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Fixed deposit interest rates sbi hdfc bank icici bank punjab national bank