Fixed deposit interest rates : வங்கியில் இருக்கும் உங்களின் இருப்புத் தொகையின் வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் வங்கிகள். கடந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே வங்கியில் வைக்கப்படும் பணத்திற்கான வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த வட்டி விகதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வங்கியில் பணம் சேமிப்பவர்களின் வருமானம் நிலையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதத்தை (Fixed deposit interest rates ) அதிகரிக்கும் வங்கிகள்...
இந்த நிதியாண்டில், நவம்பர் 7ம் தேதி வரையில் செலுத்தப்பட வேண்டிய புதிய கடன் தொகை மட்டும் சுமார் 122% ஆக இருந்தது. கடந்த வருடம் இதன் மதிப்பானது 90% மட்டுமே. அதாவது வங்கிகளில் வைப்பு நிதியாக வருவது 100 ரூபாய் தான். ஆனால் கடன் அளிப்பது 122 ரூபாய். வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன்களை அளிப்பதற்கு, வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு அதிகப்படியான வட்டியை அளிக்க வங்கிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
வங்கிகளில் இருந்து அளிக்கப்படும் கடனுக்கும், வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்திற்குமான இடைவெளியை குறைக்கும் முயற்சியாக இந்த திட்டத்தை வங்கிகள் மேற்கொள்கின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 9% சேமிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால் கடன் வாங்கும் விகிதம் 15% அதிகரித்து வருகிறது.
வங்கியின் பணப் புழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் டெபாசிட் செய்யும் பணத்திற்கான வட்டி விகிதத்தை அதிகரித்து அறிவித்துள்ளனர்.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!