முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம். அந்த வரிசையில் முதலில் இருப்ப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.
பிக்சட் டெபாசிட்களில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும். ரிஸ்க் என்பது இல்லை. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் வட்டி விகிதத்தையும் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு பார்த்து ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு எங்கு லாபம் அதிகம் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
எனவே 6.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வட்டியாக 76,084 ரூபாய் கிடைக்கும். எனவே முதிர்ச்சியின் போது நீங்கள் மொத்தம் 2,76,084 ரூபாயை பெறுவீர்கள்.
இதுவே மூத்த குடிமக்கள், 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக ரூ.89,990 பெறுவீர்கள். முதிர்ச்சியின் போது மொத்தம் 2,89,990 கிடைக்கும்.
தபால் அலுவலகத்தில் 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு, வட்டி விகிதம் 7.5%.
நீங்கள் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.89,990 வட்டி பெறுவீர்கள். எனவே, முதிர்ச்சியின் போது, நீங்கள் மொத்தம் ரூ.2,89,990 பெறுவீர்கள். மூத்த குடிமக்களும் முதிர்ச்சியின் போது இதே வட்டி விகிதத்தையும் மொத்தத் தொகையையும் பெறுகிறார்கள்.
எனவே, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன் ஒப்பிடும்போது, போஸ்ட் ஆஃபிஸ் 5 வருட பிக்சட் டெபாசிட்க்கு அதிக வருமானத்தை வழங்குவதால், ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“