பிக்சட் டெபாசிட் திட்டம்- வட்டி அதிகம் பெறும் வங்கி எது தெரியுமா?

மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.55 சதவீத வட்டி விகித லாபம்

Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?
Hoe to get more income from fixed deposits? – நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ ) பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக ஒரு
வருடத்திற்குள் முதலீடு செய்யும் போது 6.4 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும்.ஆனால் 46 முதல் 179 நாட்கள் முதலீடு செய்யும் போது 6.25 சதவீத வட்டி விகிதமும், 180 முதல் 210 நாட்கள் முதலீடு
செய்யும் போது 6.35 சதவீத வட்டி விகிதமும்,கிடைக்கும்.

அதேபோல் 7 முதல் 45 நாட்கள் முதலீடு செய்யும் போது 5.75 சதவீத வட்டி விகித லாபமும் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 0.5 சதவீதமும், எஸ்பிஐ வங்கி ஊழியர் என்றால் 1 சதவீதம் கூடுதலாகவும் வட்டி விகித லாபம் கிடைக்கும்.

எச்டிஎப்சி:

எச்டிஎப்சி வங்கியில் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.4 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும் என்பது மேலதிக தகவல்.

ஐசிஐசிஐ:

இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் ஐசிஐசிஐ வங்கியில் , 290 முதல் 1 வருடம் வரை முதலீடு செய்யும் போது 6.75 சதவீத வட்டி விகித லாபமும், மூன்று வருடம் வரை முதலீடு
செய்யும் போது 7.5 சதவீத வட்டி விகிதமும் லாபமாக கிடைக்கும். மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.55 சதவீத வட்டி விகித லாபம் வரை கிடைக்கும்.

ஆக்சிஸ் வங்கி:

9 முதல் 364 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.1 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 7.35 சதவீத வட்டி விகித லாபம் பெறலாம். அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி விகிதம் வரை ஆக்சிஸ் வங்கியின் Fixed Deposit திட்டங்களில் லாபம்
கிடைக்கும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fixed deposit schems in banks

Next Story
நிம்மதி பெருமூச்சு விடுங்கள் மக்களே.. இனி மொபைல் எண், வங்கி எண் எதற்கும் ஆதார் அவசியமில்லை!Multipurpose national ID card
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com