/tamil-ie/media/media_files/uploads/2023/03/fixed-deposit-5.webp)
வட்டி விகிதங்கள், கடன் பெற அனுமதி மற்றும் வரிச் சலுகை காரணமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவருகின்றன.
மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவைகளின் சமீபத்திய மியூச்சுவல் ஃபண்ட் அறிக்கையின்படி, வங்கி நிலையான வைப்பு நீண்ட கால கடன் பரஸ்பர நிதி திட்டங்களை விட வலுவானதாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
வட்டி விகிதங்கள், கடன் பெற அனுமதி மற்றும் வரிச் சலுகை காரணமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவருகின்றன.
மறுபுறம் உலகெங்கிலும் உள்ள புவிசார் அரசியல் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் கடன் பத்திரத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
இதற்கிடையில் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவருகின்றன. இந்த நிலையில் 10 ஆண்டு பத்திர ஈட்டுத் தொகை 7.0 சதவீதத்தில் இருந்து 7.35 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அறிக்கையில், “மிதக்கும் விகித நிதிகளுக்கு சில தேவைகள் எழுகின்றன, ஆனால் இது ஒட்டுமொத்த கடன் பிரிவில் மிகவும் சிறிய வகையாகும். கடந்த சில காலாண்டுகளில் வலுவான வேகத்தைக் கண்ட டெப்ட் இன்டெக்ஸ் ஃபண்டுகளும் வரத்து குறைந்துள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ ரெப்போ ரேட் விகிதத்தை ஓரளவு நிலையாக வைத்துள்ளது. இதனால், வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் விகித வட்டியை உயர்த்தி உள்ளன. தற்போது பொதுத்துறை வங்கிகள் கூட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 8 சதவீதம் முதல் வட்டி வழங்கின்றன.
சிறு வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. எனினும், சிறுவங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வது நல்லது.
சிறு வங்கிகளில் ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட முதலீடுகளுக்கு மட்டும் ரிசர்வ் வங்கியின் காப்பீடு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.